|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
|
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
இலங்கை தும்புளுவாவை எனும் ஊரை சேர்ந்த எம்.வை.எம். மீஆத் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1953ல் இலங்கையில் தினகரன் வார மஞ்சரி பாலர் கழகம் மூலம் கட்டுரை கதை எழுதி இளம் எழுத்தாளர் ஆகிய இவரின் முதற் கவிதை 1961ல் ஈழத்துக் கவிமணி எம்.ஸி.எம். ஸபைர் நடத்திய “மணிக் குரல்” என்னும் சஞ்சிகையில் பிரசுரமானது. 1965ல் “ சீறும் நெற்கதிரே!’ என்ற கவிதை எம்.ஏ.றகுமான் நடாத்திய இளம்பிறை என்ற சஞ்சிகையில் வெளியானது. இலங்கையில் வெளிவரும் தினகரன், வீரகேசரி, நவமணி,ஆகிய தமிழ் தேசிய பத்திரிகைகளிலும், முத்துக்கமலம் உட்பட பல இணைய இதழ்களிலும் கவிதைகள் தொடர்ந்து எழுதி வருகின்றார். மேலும், இலங்கையில் வெளிவரும் பல ஆங்கில முன்னனி இதழ்களிலும் ஆங்கிலத்தில் கவிதை எழுதி வருகின்றார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இஸ்லாம், கல்வி, உளவியல், வரலாறு, சமய ஒப்பீடு, கலை இலக்கியம் கலாசாரம் போன்ற துறைகளில் எழுதப்பட்டு இலங்கையின் முன்னனி தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் மிழ் ஆங்கிலம் சிங்களம் மற்றும் அரபு மொழிகளுக்கான சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட. இவர் எழுதிய பல நூல்கள் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகியுள்ளன. இது தவிர சில மொழிபெயர்ப்பு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்
இவர் ஹெம்மாதகம முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின்
ஸ்தாபகரும் தலைவருமாவார். இவரது அயராத முயற்சியால் இப்பிரதேசத்தில் இளம்
எழுத்தாளர்கள் பலர் உருவாகியுள்ளனர் இலக்கியக்
கருத்தரங்குகள் இச்சங்கத்தினால் நடத்தப்பட்டு போதிய பயிற்சிகள்
வழங்கப்பட்டுள்ளன. கட்டுரை, கவிதை, சிறுகதை எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டு
பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
|
||
| முகப்பு | ||