........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 

முத்துக்கமலத்தில்
வெலிகம ரிம்ஸா முஹம்மத் படைப்புகள்

லங்கையின் தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா, முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் உதவிக் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. 2004 இல் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்' என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 180க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இலங்கை வானொலிகளில் இவரது கவிதை வாசிப்பு நடைபெற்றுள்ளது. அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் 2008ம் ஆண்டு நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்றரை வருட காலங்களாக (2004 - 2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்தும் நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். கணக்கீட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு ஆகிய 03 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது நான்காவது நூலாக வெளியிட்டிருக்கிறார்.

இவரைப் பற்றி இலங்கையின் பல அச்சிதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது BEST QUEEN FOUNDATION என்ற இலக்கிய அமைப்பின் தலைவராகவும், பூங்காவனம் காலாண்டு சஞ்சியின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வரும் இவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் 'சாமஸ்ரீ கலாபதி' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி அமைப்பிலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார். காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, போர்ச்சூழல், மானிட நேயம் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.

இவரது வலைப்பூக்கள்

கவிைகளுக்கான வலைப்பூ: www.rimzapoems.blogspot.com

பதிப்புகளுான வலைப்பூ:  www.rimzapublication.blogspot.com

சாதல் நன்றே...! -கவிதை.

அள்ளி வீசாதே...! அவதிப்படாதே...!! -கவிதை.

புயலாடும் பெண்மை! -கவிதை.

கண்ணீரில் பிறந்த காவியம்! -கவிதை.

மேலும் சில படைப்பாளர்கள்
 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு