........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தெரு வாசகம் - பகுதி 7. 

நம்மால சாப்பிடத்தான் முடிய மாட்டேங்குது!

(ஏப்ரல்-29 முதல் மே-13 வரை காதில் கேட்ட தெரு வாசகங்கள்)

ஏப்ரல் -29

"இங்க இருக்கிற ஸ்கூலயும் காலேஜையும் ஒழுங்கா நடத்த முடியாதவன் கேரளாவில போய் மெடிக்கல் காலேஜ் கட்டுறேன்னு ஆறு மாசமா சம்பளம் போடாமக் கொன்னுக்கிட்டிருக்கானே... "

-தேனி, பகவதியம்மன் கோயில் அருகில் இருவர்.

ஏப்ரல்  -30

"மதுரையில ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் தர்றாங்களாம். இங்க போட்டி போடுறவங்க வெறும் ஐம்பது ரூபாய் கொடுக்கிறானுங்க... ஓட்டு போடவே விருப்பம் வர மாட்டேங்குது..."

- ஆண்டிபட்டி பகுதியில் ஒரு பெரியவர்.

மே -1

"தொழிலாளர் தினமுன்னு கூப்பிட்டு பேரணி நடத்தினாங்க... ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்தாங்க... இரண்டு நாள் கட்டிங்குக்கு தேறும்.

- தேனி, மதுரை சாலையில் ஒருவர்.

மே -2

"இலங்கையில செத்துக் கிடக்கற தமிழனை தொலைக்காட்சி செய்தியில பார்க்கக் கூட முடியல... எப்படித்தான் மனசாட்சியில்லாம  கொன்னுக்கிட்டிருக்கானுங்களோ...? " 

-மதுரை, கோ.புதூரில் இரண்டு பெரியவர்கள்.

மே -3

"அடிக்கடி டீவியில போடுற சமையல் குறிப்பைப் பார்த்துட்டு என் வீட்டுக்காரி அடிக்கடி ஏதாவது சமைச்சுடுறாள். ஆனால் நம்மால சாப்பிடத்தான் முடிய மாட்டேங்குது."

- திருநெல்வேலி பேட்டையில் இரு இளைஞர்கள்.

மே  -4

"மாப்ளே இது திருப்பதி லட்டு மாதிரி தெரியலை. திருநெல்வேலி லாலா கடையில வாங்கின மாதிரியில்ல தெரியுது... "

-விக்கிரமசிங்கபுரம் கருத்தையாபுரம் பகுதியில் இளைஞர்கள்.

மே -5

"
எலக்சன் முடியற வரைக்கும் டாஸ்மாக் சரக்குக்கு வழியிருக்கு. அதுக்கப்புறம்தாண்டா புதுரூட்டைப் பார்க்கனும்.." 

- தேனி அல்லிநகரம் பகுதியில் சிலர்.

மே  -6

"இந்த இழவெடுத்த விஸ்கி பாட்டிலை வேற பத்திரமா சேர்த்து வச்சிடுற... எடைக்குப் போடும்போது பக்கத்து வீட்டுக்காரங்களெல்லாம் ஒரு மாதிரியாப் பார்க்கிறாங்க...  "

- சின்னமனூர் மார்க்கையன்கோட்டை ரோட்டில் கணவனிடம் புலம்பிய மனைவி.

மே  -7

"கை, இலை, முரசுன்னு ஆளாளுக்கு ஒரு சின்னம் சொல்லி ஓட்டு கேட்கிறாங்க... யாரு பணம் கொடுத்து ஓட்டு கேட்கிறாங்களோ அவங்களுக்குத்தான் என்னோட ஓட்டு...

- உத்தமபாளையம், பைபாஸ் ரோட்டில் சில இளைஞர்கள்.

மே -8

"பக்கத்து ஊரில் கல்யாணம் பண்ணிக்க  வேணாமுன்னு சொன்னேன். இப்போ பாரு அவ அடிக்கடி அவங்க அப்பன் வீட்டுக்கு ஓடிப் போயிடுறாள்...."

- தேனி பேருந்து நிலையத்தில் மகனிடம் புலம்பிய தாய்.

மே  -9

"மலையில ஏறும் போது ஜீப்பில நாற்பது ரூபாய் வாங்கினவங்க இப்போ தமிழ்நாட்டுக்காரன்கிட்ட மட்டும் இறங்க நூறு ரூபாய் வேணுமின்னு கேட்கிறானுங்க...   "

-கண்ணகி கோயிலில் புலம்பிய பல தமிழர்கள்.

மே  -10

"அரசாங்கம் நமக்கு சம்பளம் அதிகமாத் தருது... டாஸ்மாக் கடையை அரசாங்கம்தானே நடத்துது... நாம அரசாங்கத்துக்கு வருமானம் தேடித்தர வேண்டாமா? "

- தேனியில் குடிபோதையில் புலம்பிய அரசு ஊழியர்?.

மே  -11

"அந்த பொண்ணுகிட்ட கொடுத்த லவ்லெட்டரை அவங்க அண்ணன்கிட்ட கொடுத்திருச்சோன்னு பயந்து போயிட்டேண்டா... ஆனா அவ அதைக் கிழிச்சுப் போட்டுட்டாள்"

- ஆண்டிபட்டி கடைவீதியில் இரு இளைஞர்கள்.

மே -12

"பணம் கொடுக்கிறவங்களுக்குத்தான் ஓட்டு போடனும்னு மக்கள் மனசு மாறிடுச்சு... இவங்க போறதைப் பார்த்தால் ராஜபக்சே கூட தமிழ்நாட்டில நின்னு பணம் கொடுத்து ஜெயிச்சுடுவான் போலிருக்கு..."

- தேனி பள்ளிவாசல் தெருவில் சிலர்.

மே -13

"எங்க அப்பா வீட்டிலயிருந்து எவ்வளவோ கொண்டு வந்து கொட்டியிருக்கேன். அப்படியும் உன் அப்பன் என்னத்தச் செஞ்சுக் கிழிச்சுட்டான்னு என் புருசன் சொல்லிக்கிட்டிருக்காரு..."

- பெரியகுளம் தலைமைத் தபால் அலுவலகம் முன்பு ஒரு பெண்.

தொகுப்பு: தாமரைச்செல்வி. 

முந்தைய தெரு வாசகம் காண

 

a

நீங்களும் அனுப்பலாம் தெருவாசகம்

மேற்காணும் தெருவாசகங்களைப் போல் சுவையான வாசகங்களை தாங்களும் கேட்டிருக்கலாம். தாங்கள் கேட்ட சுவையான அல்லது சுமையான வாசகங்களை கேட்ட இடம், ஊர் போன்ற துணைத் தகவல்களுடன் முத்துக்கமலத்திற்கு அனுப்பி வைக்கலாம். சிறப்பானவை இந்தப்பக்கத்தில் அனுப்பியவரது பெயருடன் வெளியாகும். தாங்கள் கேட்ட வாசகங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 

msmuthukamalam@yahoo.co.in

-ஆசிரியர்

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.