|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
தெரு வாசகம் - பகுதி 8. கோயில் குளத்துக்குப் போறதோட அதுக்கும் போய்ப் பாரேன்.
(மே-14 முதல் மே-27 வரை காதில் கேட்ட தெரு வாசகங்கள்)
மே -14 "என் வீட்டுக்காரர் அரசாங்க வேலை பார்த்தாலும் அவர் டாஸ்மாக்குக்குப் போயிருக்காருன்னு சொல்லும் போது கொஞ்சம் நறுக்குன்னுதான் இருக்குது... " -மதுரை, மேலப்பொன்னகரம் பகுதியில் ஒரு பெண். மே -15 "இந்தப் பிள்ளைங்களுக்கு எப்ப ஸ்கூல் திறக்கும்னு இருக்கு. இதுங்க அடிக்கிற லூட்டியில் நமக்கு பிரஷர் ஏறிப் போயிடுது... ஆஸ்பத்திரி செலவும் ஏறிடுது..." - திண்டுக்கல், காட்டாஸ்பத்திரி பகுதியில் ஒரு பெரியவர். மே -16 "எலக்சன் ரிசல்ட் எதிர்பார்ப்புக்கு விரோதமால்ல இருக்குது... மக்கள் கொள்கை, ஜாதி, மதம், இனம் எல்லாம் விட்டுட்டு பணத்துக்கு ஓட்டுப் போட ஆரம்பிச்சுட்டாங்களே... இது எங்க போய் முடியப் போகுதோ..." - தேனி, பாரஸ்ட் ரோட்டில் இரண்டு இளைஞர்கள். மே -17 "கல்யாணம் முடிஞ்சு ஏழு வருசமாச்சு... இன்னும் குழந்தையில்லைங்கற... மெடிக்கல் செக்கப் செய்துக்க வேண்டியதுதானே... கோயில் குளத்துக்குப் போறதோட அதுக்கும் போய்ப் பாரேன். " -திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவில் அருகே இரு பெண்கள். மே -18 "வாழ்க்கையில யாரையாவது நம்பி ஏமாறுறதே உன் வேலையாப் போச்சு... இந்தக் காலத்தில உண்மை, நேர்மைன்னு சொல்லிக்கிட்டிருந்தா வறுமைதான் வரும். பெருமை எதுவும் வராது." - தேனி பேருந்து நிலையம் அருகே தன் மகனிடம் ஒரு பெரியவர். மே -19 "பிரபாகரன் செத்துப் போயிட்டாருன்னு சொல்றாங்க... இங்க இருக்கிற தமிழனுக்கும் தலைவனுக்கும் இன உணர்வு செத்து விட்ட பிறகு... எல்லாம் நடக்கும்... " -மதுரை, கே.கே.நகர் பகுதியில் சில இளைஞர்கள்.
மே
-20 - மதுரை காமராசர் பல்கலைக்கழக கேண்டினில் இரு இளைஞர்கள். மே -21 "உனக்கு நல்லா ஜால்ரா அடிக்கத் தெரியுது, சமயத்துக்கேற்ப பேசத் தெரியுது, உனக்குத்தானப்பா காலேஜில் வேலை செய்ற தகுதியிருக்கு. என்னையெல்லாம் எப்ப வேணாலும் கழட்டிடுவானுங்க... " - தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் இரு இளைஞர்கள். மே -22 "நம்ம கூடவே இருந்துக்கிட்டு இந்த கருங்காலிப் பயலுங்க ஆபிஸில போய் நம்மளைப் போட்டுக் குடுத்திடுறானுங்க... எந்த விசயத்தையும் யாரை நம்பியும் பேச முடியமாட்டேங்குது..." - தேனி அல்லிநகரம் சாவடித் தெருவில் இரு இளைஞர்கள். மே -23 "நகத்தைக் கடிக்காதடா ஆகாதுன்னாலும் கேட்காம கடிச்சுக் கடிச்சு இப்ப நகச்சுத்தி வந்து அவதிப்படுற... பெரியவங்க சொல்றதை யாருதான் கேட்கிறா..." - விக்கிரமசிங்கபுரம், கொட்டாரம் பகுதியில் பேரனிடம் ஒரு பெரியவர். மே -24 "அந்த மெட்ரிக் ஸ்கூலில் மூணு பேருதான் எக்ஸாம் எழுதியிருக்காங்க... மூணு பேருமே பெயிலாகிப் போனாங்க... என்னதான் ஸ்கூல் நடத்துறாங்களோ... இவங்களால பிள்ளைங்க வாழ்க்கையில்ல பாதிக்குது..." -தேனி, வயல்பட்டி பகுதியில் புலம்பிய ஒரு ஆசிரியர். மே -25 "கடலுக்கு மீன் பிடிக்கப் போகாததால மீன் விலையெல்லாம் ஏறிக் கிடக்குதுவே... மார்க்கெட்டில கிடைக்கிற மீனும் ஐசுல வச்சு, குழம்பு வச்சா ருசியில்லாம இருக்குது... " - தூத்துக்குடி எஸ்.எஸ்.பிள்ளை தெரு மார்க்கெட் அருகில் ஒரு பெரியவர். மே -26 "ஊருக்கு நாலு இஞ்சினியரிங் காலேஜ் புதுசா வந்துக்கிட்டிருக்கு. இன்னும் இரண்டு வருஷத்தில வேலையில்லாத பட்டதாரிகளோட இஞ்சினியர்களும் அதிகமாச் சேர்ந்திடுவாங்க போலிருக்கு... " - திருநெல்வெலி, மேலப்பாளையம் பகுதியில் சில இளைஞர்கள் . மே -27 "பாவிப்பயலுக...மாம்பழத்தைக் கல்லைப் போட்டுப் பழுக்க வச்சிடுறானுங்க... சாப்பிட்ட பின்னால் வயிற்றைக் கலக்கி டாய்லெட்டிலேயே குடியிருக்க வேண்டியிருக்கு..." - மதுரை, டி.வி.எஸ்.நகர், ராஜம் ரோட்டில் இரு பெரியவர்கள். |
|
a |
|
நீங்களும் அனுப்பலாம் தெருவாசகம்
மேற்காணும் தெருவாசகங்களைப் போல் சுவையான வாசகங்களை தாங்களும் கேட்டிருக்கலாம். தாங்கள் கேட்ட சுவையான அல்லது சுமையான வாசகங்களை கேட்ட இடம், ஊர் போன்ற துணைத் தகவல்களுடன் முத்துக்கமலத்திற்கு அனுப்பி வைக்கலாம். சிறப்பானவை இந்தப்பக்கத்தில் அனுப்பியவரது பெயருடன் வெளியாகும். தாங்கள் கேட்ட வாசகங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: msmuthukamalam@yahoo.co.in -ஆசிரியர் |
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.