........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

தெரு வாசகம் - பகுதி 9. 

கிழவிக்கு இன்னும் என்ன ஆசையிருக்குன்னு தெரியலயே....

(மே-28 முதல் ஜீன்-12 வரை காதில் கேட்ட தெரு வாசகங்கள்)

மே -28

"என்னை ஏமாத்திட்டேல்ல... நீ விளங்க மாட்ட, உன் குடும்பம் விளங்காது... எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகனும்... "

-தேனி, பங்களாமேடு பகுதியில் புலம்பிய ஒரு பெண்.

மே -29

"ஒரு நாள் உப்பைக் கூட்டிப் போட்டுறாள்... ஒரு நாள் உப்பே போடாம விட்டுறாள்... கேட்டால் உப்புதான் சரியில்லைன்றாள்... அவ உப்பைச் சரியா போடுறதுக்குள்ள நான் மண்டையப் போட்டுருவேன் போலிருக்கு...."

- ஆண்டிபட்டி,  எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இரு பெண்கள்.

மே -30

"அரசாங்கப் பள்ளிக்கூடத்தில வேலை பார்க்கிற டீச்சருங்களோட பிள்ளைங்க அரசாங்கப் பள்ளிக்கூடத்திலயா படிக்குது...? எல்லாம் மெட்ரிக் ஸ்கூலில் படிக்குதுங்க... இதுக்கு அரசாங்கம்தான் முடிவு பண்ணனும்.

- மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் சில பெரியவர்கள்.

மே -31

"அப்பாடா, நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்க... இந்தப் பிள்ளைங்களோட இரண்டு மாச லூட்டி நாளையிலிருந்து குறைஞ்சிடும்.  " 

-மதுரை, ஹார்விபட்டி பூங்கா அருகில் இரு பெண்கள்.

ஜீன் -1

"காலேஜ் லைப்ரரிக்குப் புக்ஸ், ஜர்னல் எதுவும் வாங்கறதில்லே... காலேஜ் துவங்கினப்ப வாங்கின புக்ஸிலும் பாதியைக் காணோம்... இந்த காலேஜில இருக்கிற லைப்ரரினால ஒரு பிரயோஜனமுமில்லை..."

- தேனி பகவதியம்மன் கோவில் அருகே புலம்பிய மாணவர்கள்.

ஜீன் -2

"மொபைல் வந்த பின்னால லவ்லெட்டர் குடுக்கிற வழக்கமே போயிடுச்சு... லவ் மெசேஜ் எல்லாம் மொபைல் வழியாப் போய்க்கிட்டிருக்கு... "

-பெரியகுளம், காலேஜ் விலக்கு அருகில் சில இளைஞர்கள்.

ஜீன் -3

"அந்தக்காலத்தில பத்து பதினைஞ்சுன்னு பிள்ளைங்களைப் பெத்து வளர்த்திருக்கிறோம். இப்ப ஒன்னு இரண்டோட நிறுத்திக்கிடுறாங்க... அப்படியும் பிள்ளைங்களை வளர்க்க அவங்களுக்கு கஷ்டமாயிருக்கு...

- உசிலம்பட்டி, பேருந்து நிலையம் அருகில் இரு முதியவர்கள்.

ஜீன் -4

"எங்க வீட்டுக்கு கல்யாணம், சடங்குன்னு  பன்னிரண்டு இன்விடேசன் வந்திருக்கு... ஒவ்வொரு இன்விடேசனுக்கும் நூறு ரூபாய் மொய் செய்யனும்னாலும் இந்த மாசம் ஆயிரத்து இருநூறு வேணும். "

- பெரியகுளம்,  தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் சில பெண்கள்.

ஜீன் -5

"காதுகுத்து, கல்யாணம், இழவுவீடுன்னு எது வந்தாலும் பார்ட்டி வேணும்னு அமுக்கிடுறாங்க... அதனால டாஸ்மாக்கு செலவுன்னு ஒரு செலவு இப்போ கட்டாயமாயிடுச்சு...

- தேனி பங்களாமேட்டில் இரு இளைஞர்கள்.

ஜீன்-6

"தமிழ்நாட்டில இஞ்சினியரிங் காலேஜ் ஒவ்வொரு வருசமும் அதிகமாகிக்கிட்டிருக்கு... அப்படியும் பீசைக் கூட்டிக்கிறாங்க... டொனேசன் வாங்கிக்கிறாங்க... ஆனா நிறைய காலேஜில எந்த  வசதியும் செய்ய மாட்டேங்கிறாங்க..."

- மதுரை வில்லாபுரம் பகுதியில் ஒரு பெரியவர்.

ஜீன்-7

"பலரும் இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறாங்க. கடைசியில் இருக்கிறதையும் விட்டுட்டு ஒண்ணுமில்லாமப் போயிடுறாங்க... ஆசைப்பட்டவங்க அவதிப்பட்டுத்தானே ஆகனும்."

-தேனி என்.ஆர்.டி.நகர் பகுதியில் ஒருவர்.

ஜீன்-8

"சம்மர் லீவுல கூட சின்ன பிள்ளைங்களை சம்மர் கோர்ஸ்ன்னு சொல்லி சேர்த்துவிட்டு அவங்களோட சுதந்திரத்தைப் பறிக்க விரும்பல... அவங்க விருப்பப்படி விளையாடிக்கிட்டு இருக்கட்டுமுன்னு விட்டுட்டேன். "

- பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் ஒரு இளைஞர்.

ஜீன்-9

"கோவில் கொடைக்கு இந்த வருசம் தலைக்கட்டு வரி இரண்டாயிரம் போட்டிருக்காங்க... எங்க கோவிலுக்கு ஆளுங்க குறைவுங்கறதால வரி அதிகமாயிடுச்சு "

- திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கு அருகில் ஒருவர்.

ஜீன்-10

"நம்ம மதுரை தொகுதி எம்.பி. மத்திய மந்திரி ஆயிட்டாரு. இவராவது மதுரைக்கு நிறைய ரயில் திட்டம் கொண்டு வருவாரான்னு பார்ப்போம்."

- மதுரை ஜங்சன் ரயில் நிலையத்தில் சில பெரியவர்கள்.

ஜீன் -11

"கிழவிக்கு இந்த உலகத்தை விட்டுப் போக மனசில்ல போலிருக்கு... அதான் சாகாம இழுத்துக்கிட்டிருக்கு... சாவோடப் போராடிக்கிட்டிருக்கு...  கிழவிக்கு இன்னும என்ன ஆசையிருக்குன்னு தெரியலயே..."

- தேனி, பழனிசெட்டிபட்டியில் இரு பெண்கள்.

ஜீன் -12

"தங்களோட பிள்ளைகள் பிளஸ் டூவில் மார்க் அதிகமா எடுக்கனும்னு இங்கயிருந்து திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடுன்னு வெளியூர் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட ஆரம்பிச்சுட்டாங்க... இது எங்க போய் முடியப் போகுதோ?"

- பெரியகுளம் தாலுகா அலுவலகம் அருகில் இருவர்.

தொகுப்பு: தாமரைச்செல்வி. 

முந்தைய தெரு வாசகம் காண

 

a

நீங்களும் அனுப்பலாம் தெருவாசகம்

மேற்காணும் தெருவாசகங்களைப் போல் சுவையான வாசகங்களை தாங்களும் கேட்டிருக்கலாம். தாங்கள் கேட்ட சுவையான அல்லது சுமையான வாசகங்களை கேட்ட இடம், ஊர் போன்ற துணைத் தகவல்களுடன் முத்துக்கமலத்திற்கு அனுப்பி வைக்கலாம். சிறப்பானவை இந்தப்பக்கத்தில் அனுப்பியவரது பெயருடன் வெளியாகும். தாங்கள் கேட்ட வாசகங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: 

msmuthukamalam@yahoo.co.in

-ஆசிரியர்

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.