........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - அசைவ வகைகள்- மீன்-3-1

சீலா மீன் புட்டு

தேவையான பொருட்கள்:

  • சீலா மீன்- 250 கிராம். (முள் அதிகமில்லாத மீன் எதுவாகவும் இருக்கலாம்.)

  • இஞ்சி- சிறியது.

  • வெங்காயம்- 10 எண்ணம்

  • பச்சை மிளகாய்- 5 எண்ணம்

  • பூண்டு- 4 பல்

  • கடுகு, உளுந்து- - தேவையான அளவு.

  • உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

1. மீனை நன்றாக வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
2. இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுத் தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
4. அதன்பிறகு அதில் உதிர்த்து வைத்த மீனைப் போட்டு, தேவையான உபு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சுவையான மீன் புட்டு தயார்.  சாதத்திற்கு துணை உணவாக சாப்பிட அருமையாக இருக்கும்.
 

 

                                                                                                                                                                                                                 முகப்பு