........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - அசைவ வகைகள்- மீன்-3-4

சீலா மீன் வடை

தேவையான பொருட்கள்:

  • சீலா மீன் - 600 கிராம் ( சீலா மீன் கிடைக்காத போது முள் இல்லாத மீன் எதையும் தேர்வு செய்து கொள்ளவும்)

  • உளுந்து - 300 கிராம்

  • பெரிய வெங்காயம் - 100 கிராம்

  • முட்டை - 3 எண்ணம்

  • மிளகாய் - 25 கிராம்

  • மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

  • பூண்டு - 8 பல்

  • மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • இஞ்சி - சிறிது

  • மல்லித்தழை - தேவையான அளவு

  • நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. மீனை ஆவியில் வேகவைத்து முள்ளை அகற்றி உதிர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
2. இந்த மீனுடன் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம்,  மிளகாய், பூண்டு, மல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
3. இதில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள். மஞ்சள்தூள் போன்றவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
4. இந்தக் கலவையில் உளுந்தம் பருப்பை மாவாக்கிக் கலந்து நன்றாகப் பிசையவும்.
5. பிசைந்த கலவையை வடைபோல் தட்டி சூடாக்கப்பட்ட நல்லெண்ணையில் பொரித்து எடுக்கவும்.

-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

சித்ரா பலவேசம் அவர்களின் இதர படைப்புகள

இந்த சீலா மீன் வடை சாப்பிடச் சுவையாக இருக்கும்.  அசைவப் பிரியர்களுக்கு இது ஒரு அற்புதமான வடை.
 

 

                                                                                                                                                                                                                 முகப்பு