........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - அசைவ வகைகள்- மீன்-3-5

இறால் பொறியல்

தேவையான பொருட்கள்:

  • இறால் மீன் - 300 கிராம்

  • வெங்காயம் - 200 கிராம்

  • தக்காளி - 50 கிராம்

  • இஞ்சி - சிறிது

  • மிளகாய் - 3 எண்ணம்

  • பூண்டு - 5 பல்

  • மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

  • கரம் மசால்தூள் - 1 தேக்கரண்டி

  • மஞ்சள்தூள் - சிறிது

  • உப்பு - தேவையான அளவு

  • கடுகு, உளுந்து - தேவையான அளவு

  • நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. இறால் மீனைக் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிய அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
3. உப்பு, பூண்டு, இஞ்சி சேர்த்து நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
5. இதில் கரம் மசால்தூள், மிளகாய்த் தூள், நறுக்கி வைத்த வெங்காயம், தக்காள், மிளகாய் போன்றவைகளைச் சேர்த்துக் கிளறவும்.
6. பின் அரைத்து வைத்த பூண்டு, இஞ்சி விழுது, இறால் மீன் போட்டு வதக்கவும்.
7. சிறிது தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதி வந்ததும் இறக்கவும்.
 

-எஸ்.அருணாசலவடிவு, தூத்துக்குடி.

இந்த இறால் மீன் பொறியல் துணை உணவாக வைத்துச் சாப்பிட சூப்பராக இருக்கும்..
 

 

                                                                                                                                                                                                                 முகப்பு