........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                            
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - அசைவ வகைகள்-முட்டை-5-5.

முட்டை பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

  • அவித்த முட்டை - 4

  • கடலை மாவு - 300 கிராம்

  • அரிசி மாவு - 50 கிராம்

  • மிளகாய்த்தூள் - 50 கிராம்

  • உப்பு - தேவையான அளவு

  • ந.எண்ணெய் - 200 மிலி.

  • சோடா உப்பு - 1/4 தேக்கரண்டி.

செய்முறை:

1. அவித்த முட்டையை நீளவாக்கில் நான்காக வெட்டி வைக்கவும்.*
2. கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, சோடாப்பு, மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி போடும் அளவிற்கு மாவாகக் கரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும், முட்டைத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.

-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

* முட்டையின் மஞ்சள் கரு பகுதியில் மிளகுத்தூளில் தோய்த்தால் நன்றாக இருக்கும்.

# முழு அவித்த முட்டையைப் பஜ்ஜி மாவில் தோய்த்துப் போட்டால் முட்டை போண்டாவாகி விடும். இந்த முட்டை போண்டாவை நான்காக நீளவாக்கில் கீறி அதனுள் தேவையான மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

சித்ரா பலவேசம் அவர்களின் இதர படைப்புகள

இந்த முட்டை பஜ்ஜி மாலை நேரச் சிற்றுண்டியாகச் சுடச்சுடச் சாப்பிட சுவையாக இருக்கும்.!
 

 

                                                                                                                                                                                                                 முகப்பு