........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                               
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - கார வகைகள்-5

மகிழம்பூ முறுக்கு

தேவையான பொருட்கள்:

  • புழுங்கல் அரிசி - 400 கிராம்

  • வறுகடலை (பொட்டுக்கடலை) - 100 கிராம்

  • சீரகம் - 20 கிராம்

  • வெண்ணெய் - சிறிது

  • உப்பு- தேவையான அளவு

  • நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

1. புழுங்கல் அரிசியை ஊறவைத்து தேவையான உப்பு, நீர் சேர்த்து மாவைக் கெட்டியாக அரைக்கவும்.
2. வறுகடலையை மாவு போல் அரைத்து சலித்துக் கொள்ளவும்.
3. அரைத்து வைத்த அரிசி மாவுடன், வறுகடலை மாவு, சீரகம் சேர்த்துக் கையில் வெண்ணெய் தேய்த்துப் பிசையவும்.
4. மாவை முறுக்கு அச்சில் வைத்துப் பிழிந்து வைக்கவும்
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிழிந்து வைத்த முறுக்குகளைப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

சித்ரா பலவேசம் அவர்களின் இதர படைப்புகள

இந்த முறுக்கு வெள்ளை நிறத்துடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு