........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - பனியார வகைகள்-1

குழிப் பனியாரம்

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி-1 கப்

  • புழுங்கலரிசி-1 கப்

  • உளுந்தம் பருப்பு- 1 மேஜைக் கரண்டி

  • தேங்காய்- பாதியளவு.

  • வெந்தயம்- சிறிது.

  • உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக நனைய வைத்து இரவில் தோசை மாவு போல் ஆட்டி உப்பு சேர்த்துப் பிசைந்து வைக்கவும்.
2. காலையில் தேங்காய்ப்பூ கலந்து குழிப்பனியாரச் சட்டியில் ஊற்றி எடுக்கவும்.

* மாவில் வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் வெட்டிப் போட்டுக் காரப்பனியாரமாகவும் சுடலாம்.
* இனிப்புப் பனியாரமாக சுட விரும்புபவர்கள் கருப்பட்டி கலந்தும் சுடலாம்...! சாப்பிடலாம்...!!

இந்தக் குழிப்பனியாரத்துக்கு தேங்காய்ச் சட்னி ஊற்றிச் சாப்பிட சுவையாக வைக்கவும்.

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு