........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                          
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - பச்சடி வகைகள்-5

பூசணிக்காய் புளிக்கூட்டு

தேவையான பொருட்கள்:

  • பூசனிக்காய் - 1/2 கிலோ

  • புளி - 30 கிராம்

  • துவரம் பருப்பு - 40 கிராம்

  • கடலை பருப்பு - 4 தேக்கரண்டி

  • உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

  • மிளகாய் வற்றல் - 2 எண்ணம்

  • தேங்காய் - 1/2 மூடி

  • உப்பு - தேவைக்கேற்ப

  • சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

செய்முறை:

1. பூசணிக்காயை நீள வாக்கில் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
2. துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
3. உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் - இவற்றை வறுத்து தேங்காயுடன் அரைக்கவும்.
4. புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து அதில் நறுக்கிய பூசணிக்காய், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும்.
5. காய் வெந்தவுடன் வேகவைத்த பருப்புகளை போட்டு கொதிக்கவிடவும்.
6. பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதித்தபின் இறக்கவும். 

-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.

சித்ரா பலவேசம் அவர்களின் இதர படைப்புகள

இந்தக் கூட்டு அடைக்குத் தொட்டுக் கொள்ள நன்றாய் இருக்கும். சாம்பார் மற்றும் ரசம் ஊற்றிச் சாப்பிடும் சாதத்திற்கு துணை உணவாகவும் வைத்துக் கொள்ளலாம்.

 
                                                                                                                                                                                                                 முகப்பு