........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                       
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - பிற மாநில உணவு வகைகள்-2

கேரள பாகற்காய் அச்சார்

தேவையான பொருட்கள்:

  • பாகற்காய்- 200 கிராம்.

  • வெங்காயம்- 50 கிராம்

  • மிளகாய்- 15 கிராம்.

  • மல்லித்தூள்- 10 கிராம்.

  • மிளகுப்பொடி- தேவையான அளவு.

  • உப்பு- தேவையான அளவு.

  • தேங்காய்- சிறியது.

  • கருவேப்பிலை- சிறிது.

செய்முறை:

1. பாகற்காயை சரியான அளவுகளில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தேவையான தண்ணீர் சேர்த்து பாகற்காயை அதில் நன்கு வேக வைக்கவும். 
3. நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை கலந்து வாணலியில் வதக்கி எடுக்கவும்.
4. தேவைக்கேற்ப மல்லித்தூள், மிளகுப்பொடி, உப்பு, துருவிய தேங்காய் கலக்கவும்.
5. இவையனைத்தையும் அந்த பாகற்காயுடன் சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.

சாதத்துடன் சேர்த்தோ, சாதத்திற்கு துணையாகவோ இந்த கேரள மாநில உணவான பாகற்காய் அச்சார் சாப்பிடலாம்.

 
                                                                                                                                                                                                                 முகப்பு