........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                   
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - சாத வகைகள்-2

புதினா சாதம்

தேவையான பொருட்கள்:

  • புதினா இலை - 2கப்.

  • கடுகு - 1 தேக்கரண்டி.

  • உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி.

  • மிளகாய் வற்றல் - 6 எண்ணம்.

  • புளி - 25 கிராம்.

  • பெருங்காயம் -சிறிது.

  • அரிசிச் சாதம் - 3 கப்.

  • நல்லெண்ணெய்- 2தேக்கரண்டி.

செய்முறை:

1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி புதினா, கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
2. வறுக்கப்பட்ட புதினா மற்றும் கலவையை சிறிது உப்பு, புளி சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.
3.
சாதத்தில் இந்த புதினாக் கலவையை சிறிது எண்ணெய் விட்டுக் கிளறவும்

புதினா சாதம் சாப்பிட்டு புதிய ருசியை உணருங்கள்.

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு