........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                   
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - சாத வகைகள்-6

புளிப் பொங்கல்

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசிக் குருணை - 300 மில்லி

  • புளி - நெல்லிக்காய் அளவு

  • கடுகு - ஒரு மேசைக்கரண்டி

  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

  • கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

  • பச்சை மிளகாய் - 3 எண்ணம்

  • வரமிளகாய் - 3 எண்ணம்

  • பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி

  • கறிவேப்பிலை - 10 இலைகள்

  • நல்லண்ணெய் - 8 பெரிய மேசைக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. ஒரு வாணலியில் நல்லண்ணெய் ஊற்றவும். கடுகு,உளுந்து, கடலை பருப்பு, வரமிளகாய், பச்சைமிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
2. பின்னர் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும். உப்பு சேர்க்கவும்.
3. புளி வாசனை போனவுடன், மேலும் 600 மில்லி தண்ணீர் ஊற்றி பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதிவந்தவுடன், அரிசி குருணையை போட்டுக் கிளறி கெட்டியானவுடன் குக்கரில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் அணைக்கவும். சுவையான புளிப்பொங்கல் தயார்.

-சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.

சுபஸ்ரீஸ்ரீராம் அவர்களது பிற படைப்புகள

 இந்தப் புளிப் பொங்கலுக்கு வடகம், அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் துணை உணவாக வைத்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு