........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                        
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

1

சமையலறை - சுண்டல் வகைகள்-2

தேங்காய்- மாங்காய்- சுண்டல்

தேவையான பொருட்கள்:

  • மாங்காய் - 1 எண்ணம்

  • பட்டாணி - 200 கிராம்

  • தேங்காய் - பாதி

  • வெங்காயம் - 50 கிராம்

  • மிளகாய் - 3 எண்ணம்

  • இஞ்சி - சிறிது

  • நல்லெண்ணெய் - சிறிது

  • கடுகு, உளுந்து - தேவையான அளவு

  • பெருங்காயத்தூள் - தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. மாங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
2. பட்டாணியை வேக வைத்து ஈரக்கி வைக்கவும்.
3. தேங்காயைப் பூவாகத் துருவிக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் , இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
5. அத்துடன் மாங்காய், உப்புத்தூள் சேர்த்துக் கிளறி சுண்டல், தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

மாலை நேரத்தில் சாப்பிட இந்த தேங்காய்- மாங்காய்- சுண்டல் சுவையாக இருக்கும்.

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு