........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-1

மருத்துவச் சிரிப்புகள்

                                                                        -தேனி.எஸ்.மாரியப்பன்.

டாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு...
நண்பர்: ஏன்...?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.

JJJJJ

ஒருவர்: தொலைக் காட்சி நிகழ்ச்சியிலே ஒரு டாக்டர் மருத்துவக் குறிப்பை எப்படி சொல்ல ஆரம்பிப்பார்?
மற்றவர்: அன்பார்ந்த நோயர்களே...

JJJJJ

டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
வந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...

JJJJJ

பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்...!

JJJJJ

வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்...
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க...

JJJJJ

ஒருவர்: போலி டாக்டரிலே இவர் ஒரு வித்தியாசமானவர்...
மற்றவர்: எப்படிச் சொல்றீங்க...?
ஒருவர்: எந்த வியாதியையும் இவர் குணப்படுத்தாமல் விட்டதில்லை...

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய சிரிப்புகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.