........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-2

அலுவலக சிரிப்புகள்

                                                                                              - தேனி.எஸ்.மாரியப்பன்.

மேலாளர்: என்னம்மா ...தப்புத்தப்பா டைப் அடித்திருக்கிறாயே...
டைப்பிஸ்ட்: சாரி சார், பக்கத்திலிருந்தவர் கிச்சு கிச்சு மூட்டி விட்டார்.

JJJJJ

மேலாளர்: இதுவரை நூறு இன்டர்வியுவிற்குப் போயிருக்கேன்னு சொல்றீயே, ஏன் உனக்கு வேலை கிடைக்கலை?
வந்தவன்: எல்லோரும் மடத்தனமாக் கேள்வி கேட்கிறாங்க சார்.

JJJJJ

ஒருவர்: என்ன ஆபிஸ்ல திடீரென்று போராட்டம் நடத்துறாங்க...?
மற்றவர்: கார், ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு வெகிக்கிள் அலவன்ஸ் கொடுப்பது போல் நடந்து வருகிறவர்களுக்கு வாக்கிங் அலவன்ஸ் வழங்கனுமாம்...

JJJJJ

ஒருவர்: எங்க ஆபிஸ்ல யாரும் தூங்காம இருக்க ஒரு வழி பண்ணிட்டேன்.
மற்றவர்: என்ன பண்ணுனீங்க...?
ஒருவர்: புதுசா ரெண்டு லேடி டைப்பிஸ்டுகளை வேலைக்குச் சேர்த்திருக்கிறேன்.

JJJJJ

ஒருவர்: இந்த ஆபிஸ் ரொம்ப நேர்மையான ஆபிஸ்ங்க...
மற்றவர்: யாருமே லஞ்சம் வாங்க மாட்டார்களா...?
ஒருவர்: வாங்குவாங்க...அவங்க போட்டிருக்கிற லிஸ்ட்படிதான் வாங்குவாங்க...

JJJJJ

மேலாளர்: ஆறு மாதத்திற்கு முன்னாலே தான் உங்க பெண் கல்யாணமுன்னு கடன் வாங்கினீங்க... இப்போ மறுபடியும் கடன் கேட்கிறீங்களே... உங்களுக்கு இரண்டு பெண்ணா...?
ஊழியர்: இல்லைங்க... ஒரு பெண் தான். அவளோட கணவரை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணப் போறா சார்...

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய சிரிப்புகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.