|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-29 உங்க தாத்தாவைக் குதிரை விரட்டுதே...
- குரு.சுப்ரமணியன்.
ஒருவர்: அந்த நடிகை நடிப்புக்கு முழுக்குப் போடப் போறாங்களாம்
மற்றவர்: ஏன்? ஒருவர்: அவங்க முழுகாம இருக்காங்களாம்.______________ ஒருவர்: ஆனாலும் நம் தலைவர் சிலையை இவ்வளவு கேவலமா செஞ்சிருக்க வேண்டாம்.? மற்றவர்: ஏன்? ஒருவர்: லஞ்சம் வாங்கறதுக்காக கை நீட்டறாப்பிலே பண்ணி இருக்காங்களே. ______________ ஒருவர்: என் பையன் இப்போ கல்யாணத்துக்கு ரெடி மற்றவர்: அப்படியா? ஒருவர்: ஆமாம், கேட்டரிங் படிப்பு முடிச்சுட்டு நல்லா சமைக்கக் கத்துக்கிட்டான். ______________
ஒருவர்: என் பெண்டாட்டி என்னை எதிர்த்துப் பேசினான்னு அடிஅடின்னு அடிச்சு விளாசிட்டேன். ______________
ஒருவர்: தலைவர் தன் கைகள் கறை படாதவைங்கறதை எப்படிக் காட்டறார் பாருங்க.! ______________ ஒருவர்: சமையல் ஏன் ஒரேடியா உப்புக் கரிக்குது? மற்றவர்: என் மனைவி டிவி சீரியல் பார்த்து அழுது கண்ணீர் விட்டுகிட்டே சமைச்சதனாலே இருக்கலாம் ______________
ஒருத்தி: உங்க தாத்தாவைப் பார்த்தா, குதிரைகளெல்லாம் விரட்டிகிட்டே வருதே, ஏன்??
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.