|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சிரிக்க சிரிக்க-39 ஓட்டல் வாசலில் கழுதைகள்!
-குரு.சுப்ரமணியன்
ஒருவன்:
இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு
டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?
சட்டம் ஒரு இருட்டறையாச்சே,
அதனாலேதான்
*********
ஒருவன்: பீச்லே கடலை விக்கற பையன்
ஏன் சோகமா இருக்கான்?
மற்றவன்: இங்கே வர்றவங்க
அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்.
*********
ஒருவன்:
ஆனாலும் அந்த டாக்டர் ரொம்ப அநியாயம் பண்றாரு?
மற்றவன்: என்ன செஞ்சாரு?
ஒருவன்:
திருடின கிட்னிக்களை வச்சு ஒரு கிட்னி பாங்க்
ஆரம்பிச்சுட்டாரே. *********
ஒருத்தி:
எங்க இருபததைந்தாவது மணநாளுக்கு ராப்பிச்சை ஒரு பரிசு அனுப்பியிருக்கான்
மற்றவள்:
என்ன அது?
ஒருத்தி: ருசியாக சமைப்பதெப்படிங்கற
புஸ்தகம்தான். *********
ஒருவன்:
என்ன கல்யாணப் பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச் சுத்தி
அனுப்பியிருக்காங்க?
மற்றவன் :
பொன்னு வைக்கற இடத்திலே பூ வச்சாப் போதும்னு சம்பந்திங்க சொல்லி
இருந்தாங்களாம். *********
ஒருவன்:
அந்த ஹோட்டல் வாசலிலே ஏன் அத்தனை கழுதைங்க நிக்குது?
மற்றவன் :
அங்கே பேப்பர் மசாலா சூப்பரா இருக்குமாம்.
*********
ஒருவன்:
உங்க படத்தை நான் இருபது தடவை பார்த்தேன், தெரியுமா?
மற்றவன் :
அடே! அவ்வளவு பிரமாதமாயிருந்ததா?
ஒருவன்: இல்லை. எத்தனை தடவை
பார்த்தலும் கதையே புரியலியே. *********
ஒருவன்:
நீதிபதியையே நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜாப் போட்டது தப்பாப் போச்சு.
மற்றவன் :
ஏன்?
ஒருவன்: மேஜையிலே 'ஆர்டர், ஆர்டர்'னு
தட்டறத்துக்கு மரச்சுத்தி கேக்கறாரு.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.