........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-40

 அவர் சட்டை பண்ண மாட்டாரு...

-குரு.சுப்ரமணியன்

ஒருவன்: கைத்தடி, ஹேர்டை, செவிட்டு மிஷின் இதையெல்லாம் யாருக்கு பரிசாக் கொடுக்கப் போறே?"

மற்றவன்: அறுபதாம் கல்யாண தம்பதிகளுக்கு...!

*********

ஒருத்தி: வேலைக்காரி விஷயத்திலே உன் புருஷனை ஏன் சந்தேகப்படறே?

மற்றவள்: எனக்கு சுமாரான காபி குடுத்தாக் கூடப் பரவாயில்லை, வேலைக்காரிக்கு நல்ல காபியாக் குடுன்னு சிபாரிசு பண்றாரே!

*********

பெண்: என் புருஷனுக்குத் தூக்கத்திலே நடக்கற வியாதி இருக்கோன்னு சந்தேகமாயிருக்கு, டாக்டர்

டாக்டர்: எதனாலே?

பெண்: ஜாக்கிங் போறப்போ கனாக் கண்டேன்னு சொல்றாரே!

*********

ஒருத்தி: அந்தப் பல் டாக்டர் ரொம்ப மோசம்...!

மற்றவள்: ஏன்?

ஒருத்தி: அவங்க வீட்டு சீப்பிலே இருக்கற பல்லையெல்லாம் கூட எடுத்துட்டாரே...!

*********

ஒருத்தி: சட்டை போடாமே உன் புருஷன் வெளியே போறாரே?"

மற்றவன்: அதெல்லாம் அவர் சட்டை பண்ண மாட்டாரு...!

குரு.சுப்ரமணியன் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.