........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-43

 எனக்காக உயிரை விடுவேன்னு...

-குரு.சுப்ரமணியன்.

ஒருவன்: என் பெண்டாட்டி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கற டைப்.

மற்றவன்: உங்க வீட்டுப் பால் பாயசத்திலே பினைல் வாசனை அடிக்கறப்பவே நினைச்சேன்.

*********

காதலி: அன்பே, உங்க மேல எனக்கு ரொம்ப கோபம்.

காதலன்:
ஏன்?

காதலி: உனக்காக உயிரையும் விடுவேன்னு அடிக்கடி சொல்றீங்களே தவிர ஒரு தடவை கூடச் செஞ்சு காட்ட மாட்டேங்கறீங்களே...

*********

ஒருத்தி: சண்டை போடற உன் மாமியார் ஊருக்குப் போயிருந்தப்போ எப்படி உனக்குப் பொழுது போச்சு?.

மற்றவள்: அடுத்த தெருவிலே இருக்கற என் நாத்தனாரோட சண்டை போட்டுட்டு வருவேன்.

*********

ஒருவன்: அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டெர் வீட்டுக் கல்யாணத்திலே ஏன் கண்ணீர்ப்புகை குண்டு போடறாங்களே எதுக்கு?

மற்றவன்: டைனிங் ஹாலிலே எக்கச்சக்கக் கூட்டம் சேர்ந்து ஒரே ரகளை ஆயிட்டுதாம்.

*********

மனைவி: என் பிரசவ சமயத்திலே உங்களைக் கவனிச்சுக்க என் அம்மாவை வரவழைக்கலாமா?

கணவன்: வயசான காலத்திலே அவங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம். உன் தங்கை காலேஜ் படிப்பை முடிச்சுட்டு சும்மாத்தானே இருக்கா, அவளை வரச் சொல்லலாமே.?

குரு.சுப்ரமணியன் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.