........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-48

 எல்கேஜியில கல்யாண வயசுப் பொண்ணு...!

-குரு.சுப்ரமணியன்.

ஒருவன்: அந்த வீட்டிலெ பேய்த் தொல்லை இருக்கறதா பேசிக்கிட்டாங்களே?

மற்றவன்:
அதிலே இப்போ மகளிர் ஹாஸ்டல் வந்திட்டுது.

*********

ஒருவன்: பீச்லே குதிச்சு தற்கொலை பண்ணிக்கப் போன பெண்ணைக் காப்பாத்தினயே, அவ இப்ப எப்படி இருக்கா?

மற்றவன்:
முழுகாம இருக்கா.

*********

காதலி: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எங்க வீட்லே கடுமையான எதிர்ப்பு இருக்கு.

காதலன்:
அதனால்தானே உன்னைக் காதலிக்கறேன்...!

*********

ஜோதிடர்: இனிமே இந்த ஜாதகருக்குக் கல்யாணமே நடக்க வாய்ப்பில்லை.

வந்தவர்:
அது எங்களுக்கே தெரியும் ஜோசியரே. அவருக்கு ஏற்கனவே ரெண்டு பெண்டாட்டி இருக்கு.

*********

ஒருவன்: வரவர எதுக்குத்தான் டிரெயினிங் குடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாமப் போச்சு.

மற்றவன்:
ஏன்?

ஒருவன்:
பாரேன், "கல்யாணமான பெண்களுக்கு மாமியாருடன் சண்டை போட ஸ்பெஷல் பயிற்சி அளிக்கப் படும்"னு விளம்பரம் வந்திருக்கு.

*********

ஒருவள்: கல்யாண வயசிலே இருக்கற உங்க பொண்ணு இப்போதான் எல்கேஜிலே இருக்காளா!

மற்றவள்:
ஆமாம், டீச்சராயிருக்கா.

*********

ஒருவள்: எங்க வீட்டுக்காரர் டிராமாவிலே பெண் வேஷம் போட்டு நடிச்சது செளகரியமாப் போச்சு.

மற்றவள்:
எதுக்கு?

ஒருவள்:
பெண் வேஷம் போட்டுகிட்டே என் துணிகளைத் துவைச்சிசிடறாரு.

*********

ஒருவன்: உன் வீட்டுக்குத் திருடன் வந்தப்போ நீ ஏன் உன் துப்பாக்கியை உபயோகப்படுத்தலை?

மற்றவன்:
அதை அவன் கண்ணிலே படாம ஒளிச்சு வச்சுட்டேனே.

குரு.சுப்ரமணியன் அவர்களது மற்ற படைப்புகள்

  முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.