........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-50

 இலையுதிர்காலம் வருமா?

-தேனி.எஸ்.மாரியப்பன்.

இலையுதிர் காலம் வருமா?

கணவன், மனைவி இருவரும் ஓவியக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றிருந்தனர். இலைகளால் ஆன ஆடையணிந்த ஒரு பெண்ணின் படத்திற்கு “வசந்தகாலம்” என்று பெயரிட்டிருந்தார்கள். அந்தப் படத்தினருகில் வெகுநேரம் நின்று கொண்டிருந்த கணவரைப் பார்த்து எரிச்சலோடு மனைவி சொன்னாள்.

நீங்க எவ்வளவு நின்றாலும் “இலையுதிர் காலம் வராது, வாங்க போகலாம்.” என்றாள்.

இடத்தைக் காலி பண்ணுங்க...

அதிகாலை நேரம். கணவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான். மனைவி வேகவேகமாக அவனை எழுப்பினாள். “சீக்கிரம் எழுந்திருங்க... உங்க துணிகளையெல்லாம் எடுத்து வையுங்க... எனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு” என்றாள்.

“சந்தோசமாயிருக்கு. இப்ப நாம எங்கே போகிறோம்? ஊட்டியா? சிம்லாவா?” என்றான் கணவன்.

“நீங்க எங்கே வேண்டுமானாலும் போங்க...! மதியத்துக்குள்ள நீங்க என் வீட்டைக் காலி செய்திடுங்க...” என்றாள் மனைவி.

எலிகள் திருமணம் செய்து கொண்டால்?

ஒரே ஒரு எலி வருடத்தில் நூற்றுக்கணக்கான குட்டிகளைப் போடும் என்றார் ஆசிரியர்.

ஒரு மாணவன் ஒரு சந்தேகம் ஒன்று எழுந்தது, “அது திருமணம் செய்து கொண்டால் இரண்டுமாகச் சேர்ந்து எவ்வளவு குட்டிகள் போடும்?” என்று ஆசிரியரிடம் கேட்டான்.

கணவன் மனைவி பேச்சு

திருமணமான முதல் ஆண்டில் கணவன் பேசுவதை மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டில் மனைவி பேசுவதைக் கணவன் கேட்கிறான். மூன்றாம் ஆண்டில் இருவர் பேசுவதை ஊராரே கேட்கிறார்கள்.

நீ பஞ்சாங்கமா இருந்தால்...

ஒருவர் எந்நேரமும் புத்தகமும் கையுமாக படித்துக் கொண்டே இருந்தார். அவரை மணந்து கொண்ட புது மனைவி மிகவும் அலுத்துக் கொண்டே, “ புத்தகங்களின் மீது இவ்வளவு ஆசை வைத்திருக்கிறீர்களே..? என்னையும் ஒரு புத்தகமாக நினைத்து என்னிடமும் ஆசையாகப் பழகக் கூடாதா?” என்று சொன்னாள்.

அதற்கு அவன், “நீ பஞ்சாங்கமாக இருந்தால் நிச்சயம் அப்படித்தான் ஆசை வைத்து பழகியிருப்பேன்” என்றான்.

“பஞ்சாங்கமா? அதில் அப்படி என்ன இருக்கிறது?” என்றாள் அவள்.

அதற்கு அவளின் கணவன், “ஒவ்வொரு வருடமும் புதிதாக வாங்க வேண்டியிருக்கும். பழையதைக் கட்டிப் பரணில் போட்டு விடுவார்கள்.” என்றான்.

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய சிரிப்புகள் காண

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.