........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சிரிக்க சிரிக்க-6

 ஆயுள் சிரிப்புகள்.

                                                                                              - இமாம்.கவுஸ் மொய்தீன்.

வந்தவர்: டாக்டர் நான் நீண்ட ஆயுள் வாழ விரும்புகிறேன். ஒரு நல்ல வழிமுறை சொல்லுங்களேன்!
டாக்டர்: உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
வந்தவர்: இல்லை டாக்டர். திருமணம் ஆயுளை நீட்டிக்குமா?
டாக்டர்: அப்படி சொல்வதற்கில்லை! ஆனால் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்கிற நினைப்பு மீண்டும் வராது! 

JJJJJ

வந்தவர்: டாக்டர் இப்போதெல்லாம் என்னால் சிந்திக்கவே முடிவதில்லை, என்ன செய்வது?
டாக்டர்: எவ்வளவு காலமாய் இப்படி இருக்கிறது?
வந்தவர்: சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான் கல்யாணம் செய்து கொண்டது முதல்.
டாக்டர்: இல்லை. உங்களின் கணிப்பு தவறானது. இது நீங்கள் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறீர்கள்.முன்னமே நீங்கள் சிந்திதிருந்தால் உங்களின் கல்யாணமே நிகழ்ந்திருக்காது.

JJJJJ

வெளி நாடு சென்றிருந்த கணவருக்குத் தந்தி வந்தது, " மனைவி இறந்து விட்டார்.உடனே வரவும்".
கணவர் தெரிவித்தார், "என்னால் வர இயலாது, ஈமக்கிரியைகளை முடித்து விடவும்"
மீண்டும் தந்தி வந்தது, " பிணத்தை எரிப்பதா? புதைப்பதா?"
கணவர் பதில் அனுப்பினார், " பிணத்தை எரித்து விடவும். சாம்பலைப் புதைத்து
விடவும்."

 இமாம்.கவுஸ் மொய்தீன் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய சிரிப்புகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.