........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்.1

 சாந்தி முகூர்த்தம் பார்த்துட்டுப் போறேன்...

-தேனி எஸ். மாரியப்பன்.

டாக்டர்: நீங்க தினம் மூன்று கிலோ மீட்டர் நடக்கனும்.
அப்பாவி சுப்பையா: நடக்கக் கூடியதாச் சொல்லுங்க டாக்டர்.

_____________

ஒருவர்: 1977-ல் என்ன நடந்தது
அப்பாவி சுப்பையா: ஆடு நடந்தது, மாடு நடந்தது, மனிதனும்தான்
நடந்தான்.

_____________

ஒருவர்: என்ன முதுகு எல்லாம் வீங்கி இருக்கு..?
அப்பாவி சுப்பையா: என்னுடைய வேலைத் திறனைப் பாராட்டி எல்லோரும் முதுகில தட்டினாங்க...

_____________

ஒருவர்: எங்க வீட்டுக்கு யாராவது வந்தா ஃபேன் போட்டு விடுவோம்.
அப்பாவி சுப்பையா: எங்க வீட்டில கொசு வந்தால்தான் ஃபேன் போடுவோம்

_____________

ஒருவர்: கவலையை மறக்க குடிக்கிறேன்னு சொல்றீங்களே...அப்படி என்ன கவலை?
அப்பாவி சுப்பையா: குடிச்சு உடம்பு கெட்டுப் போச்சேன்னுதான் கவலை...

_____________

ஒருவர்: ஆபிசுல லஞ்சம் வாங்கினதுக்கு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களா?
அப்பாவி சுப்பையா: இல்லை... குறைவா வாங்கிட்டேனாம்...

_____________

ஒருவர்: மனைவி ஓடிப் போயிட்டான்னு சொல்றீங்க... கவலையில்லாமல் இருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: இருக்கும் போதுதான் கவலைப்பட்டேன்...இப்போ எதுக்கு கவலை?

_____________

ஒருவர்: நம்ம ஊர் பக்கம் மழை எல்லாம் எப்படி பெய்யுது?
அப்பாவி சுப்பையா: அந்தப் பக்கமும் தண்ணியாகத்தான் பெய்யுது...

_____________

ஒருவர்: எதுக்கு வாயைக் கட்டிக்கிட்டு இருக்கிறீங்க...?
அப்பாவி சுப்பையா: டாக்டர்தான் என்னை வாயைக் கட்டனும்னு சொல்லியிருக்கிறார்.

_____________

ஒருவர்: இந்தக் கண்ணாடியைப் போட்டுக்கங்க...நல்லா படிக்கலாம்.
அப்பாவி சுப்பையா: பள்ளிக்கூடமே போகாதவங்க கூட படிக்கலாமா டாக்டர்.

_____________

ஒருவர்: உங்க அம்மாவிற்கும் மனைவிக்கும் நடந்த சண்டையிலே யாருக்கு அடி அதிகம்?
அப்பாவி சுப்பையா: எனக்குத்தான்...!

_____________

ஒருவர்: முகூர்த்தம் முடிந்த பிறகு கல்யாணத்துக்கு வந்திருக்கீங்களே...?
அப்பாவி சுப்பையா: சாந்தி முகூர்த்தம் இருக்கே...பார்த்துட்டுப் போறேன்...

_____________

ஒருவர்: டாக்டர் உங்களுக்கு ஆபரேசன் வேண்டாமின்னு சொல்லிட்டாராமே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம். மருந்துலேயே கொன்றிடுறேன்னு சொல்லிட்டார்.

_____________

ஒருவர்: இவரை நடத்தை கெட்டவர்ன்னு சொல்றீங்களே...?
அப்பாவி சுப்பையா: ஆமாம் அவர் காலை விந்தி விந்தி நடப்பார்

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.