|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-13 திருட வந்தவனுக்குப் பெண்ணோட ஜாதகம் எதுக்கு? -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: நடிகைகள் எல்லாம் நீச்சல் உடையில் இருக்கிறாங்களே...? அப்பாவி சுப்பையா: இன்னைக்கு ரசிகர் வெள்ளத்தில நீச்சலடித்து வரப் போகிறார்களாம். _____________ ஜோதிடர்: உங்க பொண்ணுக்கு ஏழாமிடத்தில சந்திரன் இருந்தானே...? அப்பாவி சுப்பையா: அவன்தான் சார் என் பொண்ணைத் தள்ளிக்கிட்டுப் போயிட்டான். _____________ ஒருவர்: போலிச் சாமியார் இல்லைன்னு சொல்றீங்க... அப்புறம் எதுக்கு அவரைக் கைது பண்றாங்க? அப்பாவி சுப்பையா: அவர் புரளி கிளப்பி விடும் புரளிச் சாமியாராம்! _____________ ஒருவர்: நீ திருமணம் பண்ணிக்க வேண்டாமுன்னு முடிவு பண்ணிட்டியா ஏன்? அப்பாவி சுப்பையா: இருக்கிற இரண்டு மனைவி போதுமுன்னுதான். _____________ டாக்டர்: இவருக்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் சொல்லக் கூடாது. அப்பாவி சுப்பையா: அப்படியானால் உங்களுக்குப் பில் கிடைக்காது. _____________ ஒருவர்: கொடுத்த கடனைக் கேட்டா எழுதியிருக்கேன்னு சொல்றீங்களே... கதை எழுதியிருக்கீங்களா...? அப்பாவி சுப்பையா: இல்லைங்க... மாமனாருக்குக் கடிதம் எழுதியிருக்கேன்..! _____________ அதிகாரி: உங்க வீட்டில இரண்டு கோடி ரூபாய் பணமிருக்கே... இதற்கு என்ன சொல்றீங்க? அப்பாவி சுப்பையா: சொல்றதுக்கு என்ன இருக்கு...உங்களுக்கு வேணுமின்னா கொஞ்சம் எடுத்துக்கங்க... _____________ வீட்டுக்காரர்: திருட வந்த நீ என்னோட பெண்ணின் ஜாதகத்தைக் கேட்கிற? அப்பாவி சுப்பையா: என் மகனுக்குப் பெண் பார்த்துக்கிட்டிருக்கேனே...! _____________ இன்ஸ்பெக்டர்: உங்க மனைவி ஊரிலிருந்து வந்துட்டாங்களான்னு இங்க வந்து எதுக்குக் கேட்கிறீங்க...? அப்பாவி சுப்பையா: ஊரிலிருந்து வருகிறேன். காலை பத்து மணிக்கு ஸ்டேசனுக்கு வாங்கன்னு போன் பண்ணிச் சொன்னாளே...! _____________ டாக்டர்: உங்க மனைவிக்கு இருதய ஆபரேசன் வேணாமின்னு சொல்றீங்களே ஏன்? அப்பாவி சுப்பையா: எனக்கு நல்லாத் தெரியும். அவளுக்கு இருதயமே கிடையாது டாக்டர்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.