........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-17

அது இருக்கட்டும் அலமேலு..!

-தேனி எஸ். மாரியப்பன்.

மனைவி: இன்னைக்குப் பேப்பர் பார்த்தீங்களா..? தீபாவளிப் பலகாரம் செய்யத் தெரியாத கணவன் விவாகரத்தாம்...!

அப்பாவி சுப்பையா: அது இருக்கட்டும் அலமேலு. இன்னிக்கு என்ன பலகாரம் செய்யனும்னு சொல்லு...!

_____________

ஒருவர்: தலையில ஹெல்மெட் போட்டுக்கிட்டு நடந்து போறீங்களே...?

அப்பாவி சுப்பையா: வேதீபாவளி பட்டாசுக்கு பாதுகாப்பாய் இருக்கட்டுமேன்னுதான்.

_____________

ஒருவர்: நீ யோகக்காரண்டா..! கல்யாணமான நாலு மாசத்தில தலைத் தீபாவளி வந்திடுச்சு...!

அப்பாவி சுப்பையா: அட போப்பா...! எனக்கு கல்யாணமான நாலு மாசத்தில குழந்தையே பிறந்திடுச்சு...!

_____________

ஒருவர்: உங்க மனைவியைப் போலீஸ் பிடிச்சுட்டுப் போகுதே...ஏன்?

அப்பாவி சுப்பையா: அவ செஞ்ச தீபாவளி பலகாரத்தைச் சாப்பிட்ட ஒரு பிச்சைக்காரன் இறந்திட்டானாம்.

_____________

ஒருவர்: அரசியல்வாதியோட பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டது தப்பாப் போச்சா...!

அப்பாவி சுப்பையா: ஆமாம். தலைத் தீபாவளிக்கு குண்டர்களை வச்சு மிரட்டி எதுவும் செய்யாமல் அனுப்பிட்டார்.!

_____________

ஒருவர்: உன் மனைவி காணாமல் போனாலும் தலை தீபாவளி கொண்டாடிட்டியா...எப்படி?

அப்பாவி சுப்பையா: அவளோட தங்கையோட சேர்ந்துதான்.

_____________

ஒருவர்: மன்னர் பரம்பரைன்னு சொல்லிக்கிட்டு இருந்த உங்க மாமனார் தீபாவளிக்கு என்ன செய்தார்...?

அப்பாவி சுப்பையா: தலைத் தீபாவளிக்கு போன என்னை "மாப்பிள்ளை வர்றார்...பராக்...பராக்..."ன்னு சொல்லி வரவேற்றார். அவ்வளவுதான்.!

_____________

ஒருவர்: என்னோட மனைவி இட்லி சுட்டா மல்லிகைப்பூவாட்டம் இருக்கும்...!

அப்பாவி சுப்பையா: அப்ப வடை சுட்டா நூலாட்டம் இருக்குமா?

_____________

ஒருவர்: நம்ம தலைத் தீபாவளிக்கு எங்கப்பா வீட்டுக்குப் போக வேண்டாமுன்னு சொல்றீங்களே... ஏன்?

அப்பாவி சுப்பையா: என்னோட பொண்ணு தலை தீபாவளிக்கு இங்க வர்றாளாம்.!

_____________

ஒருவர்:  உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகி மூணு மாசத்துக்குள்ள தலை தீபாவளி வந்திடுச்சா...?

அப்பாவி சுப்பையா: இல்லீங்க... மாப்பிள்ளை அனுப்பின விவாகரத்து நோட்டீசு வந்திடுச்சு...!

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.