|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-18 அது கேசுக்காக இல்லை..! -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: உங்க வீட்டுக் கல்யாணப் பத்திரிகையில இரு வீட்டார் அழைப்புன்னு போட்டிருக்கீங்களே...? அப்பாவி சுப்பையா: ஆமாம். என்னோட சின்னவீட்டையும் சேர்த்துத்தான்! _____________ ஒருவர்: மத்தவங்க கையை நம்பித்தான் நீங்க பிழைக்கிறீங்களா? அப்பாவி சுப்பையா: ஆமாங்க. கைரேகை பலன் சொல்லிப் பிழைக்கிறேன். _____________ ஒருவர்: ஜோதிடரைக் கூப்பிட்டு வந்து என்ன கேட்டீங்க? அப்பாவி சுப்பையா: என்னோட ராசிக்கு சின்ன வீடு எந்தப் பக்கம் இருக்கனுமின்னுதான்.! _____________ ஒருவர்: நான் ஆபரேசன் செய்தால் பிழைத்துக் கொள்வீர்கள்? அப்பாவி சுப்பையா: பகல் கனவெல்லாம் காணாதீங்க டாக்டர். _____________ ஒருவர்: உங்க பையன் எட்டாவது படிக்கிறானே... குழந்தை இல்லைன்னு சொல்றீங்களே...? அப்பாவி சுப்பையா: அவனுக்குப் பிறகு குழந்தை இல்லீங்க... _____________ ஒருவர்: சொர்க்கமும் நரகமும் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? அப்பாவி சுப்பையா: என்னோட சின்ன வீடு, பெரிய வீடு மாதிரிதான். _____________ போலீஸ்: கேசுக்காக இன்ஸ்பெக்டர் உங்களை வந்து பார்க்கச் சொன்னார்..? அப்பாவி சுப்பையா: அது கேசுக்காக இல்ல; காசுக்காக. _____________ ஒருவர்: உங்களுக்கு இந்த ஆபரேசனை இரண்டு வருசத்துக்கு முன்னாலேயே செய்யனும்னு டாக்டர் சொன்னாராமே... அப்பாவி சுப்பையா: ஆமாம் அவருக்குப் பண கஷ்டம் வரும் போதெல்லாம் ஆபரேசன் பண்ணனும்பாரு..! _____________ ஒருவர்: உங்க மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்னு, ரெண்டு, மூணுன்னு எண்ணுவாங்களாமே? அப்பாவி சுப்பையா: ஆமாம். மூணு எண்ணுறதுக்குள்ள அந்த இடத்தை விட்டு நான் ஓடிடனும்! _____________ டாக்டர்: சீட்டு எழுதி எக்ஸ்ரே எடுக்க அனுப்பியும் ஏன் எடுக்கல? அப்பாவி சுப்பையா: அந்தச் சீட்டை ஜெராக்ஸ்தான் எடுக்க முடியுமாம். எக்ஸ்ரே எடுக்க முடியாதாம்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.