|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-20 பிழைக்கத் தெரிந்த பாட்டி -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: எங்கப்பாவை ஆஸ்பிடலில பார்க்க வர்றேன்னு சொன்னீங்களே...ஏன் வரலை? அப்பாவி சுப்பையா: முடிஞ்சா வர்றேன்னு சொன்னேன். அதான் முடியலையே..! _____________ ஒருவர்: உனக்குப் பன்றிக் காய்ச்சல்ன்னு டாக்டர்கிட்ட போனியே... என்ன சொன்னார்? அப்பாவி சுப்பையா: அவருக்கும் பன்றிக் காய்ச்சலாம். முகமூடி போட்டு உட்கார்ந்திருந்தார். _____________ தாய்: ஏண்டா, உன் மனைவியைத் தலையில தூக்கி வச்சு ஆடுறியாமே...? அப்பாவி சுப்பையா: அதெப்படிம்மா முடியும் அவளோட எடை எண்பது கிலோவாச்சே...! _____________ டாக்டர்: நர்ஸை சகோதரின்னு கூப்பிடுறீங்களே... ஏன்? அப்பாவி சுப்பையா: எனக்கு தமிழ் பற்று அதிகம் மருத்துவர் அய்யா...! _____________ ஒருவர்: உங்களுக்குப் போதை ஏறிட்டா கண்டபடி பேசுவீங்களாமே? அப்பாவி சுப்பையா: ஆமாம். என் மனைவியைக் கண்ணே, மணியேன்னு கொஞ்சுவேன். _____________ ஒருவர்: உங்க பாட்டி பிழைக்கத் தெரிந்தவருன்னு எப்படி சொல்றீங்க...? அப்பாவி சுப்பையா: உயிர் போனாலும் டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களே...! _____________ பத்திரிகை ஆசிரியர்: வாசகர்களுக்கு பத்திரிகையை டேஸ்ட்டாக் கொடுக்க என்ன செய்யலாம்? அப்பாவி சுப்பையா: பத்திரிகையோட அட்டையில் தேன் தடவிக் கொடுக்கலாம். _____________ நீதிபதி: எதிரியை ஆள் வைத்துக் கொன்றாயாமே...? அப்பாவி சுப்பையா: ஆமாங்க... எஜமான் எனக்கு கொலை செய்றதில அனுபவமில்லையே..! _____________ ஒருவர்: நகைக்கடைக்காரர் வீட்டில் பொண்ணுக்கு ஒரு கிலோ தங்கம் போடுறதா சொல்லி 900 கிராம்தான் போட்டிருக்காங்களா. ஏன்? அப்பாவி சுப்பையா: செய்கூலி, சேதாரமுன்னு 100 கிராம் குறைச்சிட்டாங்க. _____________ ஒருவர்: டாக்டர்கிட்ட தனியா பேசனுமின்னு சொன்னீங்களே... என்ன சொன்னீங்க? அப்பாவி சுப்பையா: நானும் நர்ஸ் பிரியாவும் லவ் பண்றோம். கண்டுக்காதீங்கன்னு சொன்னேன்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.