|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-21 முதலிரவில் லைட்டை அணைப்பது ஏன்? -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: உங்க மனைவி எதுக்கு உங்களை அடித்தார்கள்...? அப்பாவி சுப்பையா: பொறுத்தது போதும்... என்பதற்குப் பதிலா பெருத்தது போதுமுன்னு வாய் தவறிச் சொல்லிட்டேன்..! _____________ ஒருவர்: இருமல் நிற்க மாட்டேங்குதுங்க...? அப்பாவி சுப்பையா: அப்படின்னா அங்க உட்கார வையுங்க...! இல்ல படுக்க வையுங்க...! _____________ பியூன்: சார் மணி ஆறாகுது. வீட்டுக்குப் போகலையா...? அப்பாவி சுப்பையா: இன்னிக்கு வருமானம் ஒன்னும் இல்ல... வீட்டுக்குப் போனால் மானம் போகும்...! _____________ டாக்டர்: நான் இன்னும் உங்களுக்கு ஊசியே போடலை. அதற்குள் இப்படி கத்துகிறீர்களே? அப்பாவி சுப்பையா: உங்க நர்சைப் பார்த்ததும் எனக்கு என் மனைவி ஞாபகம் வந்துட்டுது டாக்டர்...! _____________ நீதிபதி: மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...? அப்பாவி சுப்பையா: ஏமாற்றி திருமணம் செய்யலீங்க... நான் விரும்பித்தான் திருமணம் செய்துக்கிட்டேன்! _____________ தந்தை: எல்லாப் பாடத்திலயும் நூறு மார்க் வாங்கிட்டியா... ஆச்சர்யமாயிருக்கே...? அப்பாவி சுப்பையா: ஆமாம்ப்பா... எல்லாப் பாடத்துக்கும் சேர்த்து வாங்கியிருக்கேன். _____________ போலீஸ்: என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே? அப்பாவி சுப்பையா: என் மாமியாரும், மாமனாரும் வந்து ஆறு மாதம் ஆகுது. வேற என்ன செய்ய? _____________ ஒருவர்: போலி டாக்டருன்னு தெரிந்தும் அவரிடம் போய் வைத்தியம் பார்க்கறீங்களே? அப்பாவி சுப்பையா: அவருகிட்டதான் பீஸ் குறைவா இருக்கு! _____________ ஒருவர்: முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா? அப்பாவி சுப்பையா: மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான். _____________ ஒருவர்: நம்ம குப்புசாமி திருமணம் செய்துக்கற பொண்ணு பேரு அதிர்ஷ்டமாம்... அப்பாவி சுப்பையா: அப்ப குப்புசாமியை அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு சொல்லு...!
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.