........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

அப்பாவி சுப்பையா பதில்கள்-23

எதுக்காக தைல டப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க...?

-தேனி எஸ். மாரியப்பன்.

ஒருவர்: எடை மிசினில் ஏறி செருப்பைக் கையில் வச்சுக்கிட்டு எடை பார்க்கிறீங்களே...ஏன்?

அப்பாவி சுப்பையா: செருப்பைக் கழற்றிவிட்டு எடை பார்க்கனும்னு போட்டிருக்காங்களே...!

_____________

ஒருவர்: உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?

அப்பாவி சுப்பையா: தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடனும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!

_____________

மனைவி:  எதுக்காக தைல டப்பாவைத் தடவிக்கிட்டு இருக்கீங்க...?

அப்பாவி சுப்பையா: டாக்டர்தான் தலைவலிக்கு இதைத் தடவச் சொன்னார்.

_____________

ஒருவர்: டாக்டர் உங்களை ஓட்டலில் எதுவும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாராமே...?

அப்பாவி சுப்பையா: ஆமாம். அதனால்தான் ஓட்டலிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து வீட்டில வைத்துச் சாப்பிடுறேன்...!

_____________

ஒருவர்: தண்ணியில சக்தியே இல்லைன்னு சொல்றீங்களே...எப்படி?

அப்பாவி சுப்பையா: அதுதான் தண்ணியில மின்சாரம் எடுத்துறாங்களாமே...!

_____________

ஒருவர்: மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்ன செய்யலாம்?

அப்பாவி சுப்பையா: எல்லார் கண்ணுக்கும் சொட்டு மருந்து ஊற்ற வேண்டியதுதான்.

_____________

மனைவி: கருப்பு மை கேட்டு கடைகடையா அலையறீங்களே...ஏன்?

அப்பாவி சுப்பையா: விண்ணப்பத்தை பிளாக் லெட்டரில்தான் எழுதனும்னு போட்டிருக்கே...!

_____________

ஒருவர்: உங்க கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்த உங்க மனைவி ஏன் உங்களை அடிச்சாங்க?

அப்பாவி சுப்பையா: கடிதத்தில் சனியன்றே புறப்பட்டு வரவும்னு எழுதியிருந்த இடத்திலே றே இல்லையாம்.

_____________

ஒருவர்: உங்க மனைவிக்குப் பேச்சு வரலையேன்னு டாக்டர் கிட்ட கூப்பிட்டுப் போய் காண்பித்தாயா?

அப்பாவி சுப்பையா: ஆமாம். டாக்டரிடம் அப்படியே பேச்சு வராமலிருக்க தொடர்ந்து சிகிச்சை பண்ணச் சொன்னேன்.

_____________

ஒருவர்:  உங்க குடும்பத்துக்குன்னு என்ன செய்திருக்கீங்க...?

அப்பாவி சுப்பையா: எட்டு புள்ள பெத்திருக்கோமே..!

தேனி.எஸ்.மாரியப்பன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய பகுதி காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.