|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-27 வீட்டில ஹவுஸ்புல் போர்டு. -தேனி எஸ். மாரியப்பன்.
மனைவி: என்னங்க... நம்ம கல்யாண நாளைக் கூட மறந்து விட்டீர்களே...! அப்பாவி சுப்பையா: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விசயத்தை மறக்க மாட்டேன்னு...! _____________ ஒருவர்: காது கேட்கலன்னுதானே சொன்னீங்க... கண்ணாடி போட்டுட்டு வர்றீங்க...? அப்பாவி சுப்பையா: தெரியாத்தனமா கண் டாக்டர்கிட்ட போயிட்டேன். _____________ ஒருவர்: நான் தற்கொலை பண்ணிக்கலாமுன்னு இருக்கேன்... அப்பாவி சுப்பையா: பேசாம நீங்க ஒரு ஆஸ்பத்திரியில சேர்ந்திடுங்க...! _____________ ஒருவர்: அந்த டாக்டர்கிட்ட மட்டும் இவ்வளவு கூட்டம் அலை மோதுதே... அவ்வளவு கைராசிக்காரரா? அப்பாவி சுப்பையா: அங்கதான் சூப்பரான நர்சுகளை வேலைக்கு வைத்துள்ளார். _____________ மனைவி: என்னங்க சட்டையெல்லாம் எண்ணெய்யா இருக்கு...? அப்பாவி சுப்பையா: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேல கொஞ்சம் சாய்ந்திருந்தாள்...! _____________ ஒருவர்: என்ன சார் கல்யாண வீட்டில வந்து என் செருப்பைப் போடறீங்க...? அப்பாவி சுப்பையா: உங்களுக்கு முன்னாடியே இதை நான் பார்த்து வைத்து விட்டேங்க...! _____________ ஒருவர்: உங்க வீட்டுக்கு முன்னால "ஹவுஸ் புல்" ன்னு போர்டு போட்டிருக்கீங்களே... எதுக்கு? அப்பாவி சுப்பையா: லீவுக்கு வீட்டுக்கு வந்த பிள்ளைங்களால வீடு நிறைந்து விட்டுதுங்க... _____________ வங்கி அதிகாரி: உங்களுக்கு என்ன வகையான லோன் வேணும்? அப்பாவி சுப்பையா: திருப்பிக் கட்டாத லோன் கொடுங்க...! _____________ ஒருவர்: சாப்பிட்டுக்கிட்டிருக்கும் போதே பாதி பந்தியிலே திடீர்னு ஏன் எழுந்திட்டீங்களே ஏன்? அப்பாவி சுப்பையா: கூட்டம் கலையறதுக்குள்ள போனால்தான் நல்ல செருப்பா "செலக்ட்" பண்ணி எடுக்க முடியும். _____________ ஒருவர்: துண்டு கேட்டா வேட்டியைக் கொடுக்கிறீங்களே...? அப்பாவி சுப்பையா: இந்த வேட்டியை இரண்டு முறை தண்ணீரில் போட்டாலே துண்டாகி விடுமே.!
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.