|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
அப்பாவி சுப்பையா பதில்கள்-9 என் கொழுந்தியா பார்த்துக்கிட்டா...! -தேனி எஸ். மாரியப்பன்.
ஒருவர்: பொண்ணு பார்க்கப் போன இடத்துல உன் அம்மாவை அங்கேயே விட்டுட்டு வந்துட்டாயாமே? அப்பாவி சுப்பையா: பொண்ணு கூட சண்டை போட்டு ஒரு முடிவுக்கு வரட்டும்னுதான்! _____________ ஒருவர்: அந்த டாக்டர் உங்களுக்குக் கட்டாயம் ஆபரேசன் பண்ணனும்னு சொல்றாரே...? அப்பாவி சுப்பையா: அவங்க ஆஸ்பத்திரியில் ஆறுமாசமா யாருக்கும் சம்பளம் கொடுக்கலியாம்! _____________ ஒருவர்: உங்க மனைவியை விவாகரத்து பண்ணிய பிறகும் அவங்க ளோட இருக்கீங்களே...? அப்பாவி சுப்பையா: மாற்று ஏற்பாடு பண்ணும் வரை உடன் இருக்கச் சொல்லியிருக்காள்! _____________ டாக்டர்: நேற்றுதானே உங்களுக்கு மூணு நாளைக்கு மருந்து கொடுத்தேன்....? அப்பாவி சுப்பையா: டாக்டர் நீங்க கொடுத்த மருந்து இனிப்பாயிருக்குன்னு அப்படியே சாப்பிட்டுட்டேன்! _____________ ஒருவர்: உன் மனைவி கடல் அலை போல இருக்கான்னு சொன்னியே...இப்ப எப்படி இருக்காள்..? அப்பாவி சுப்பையா: அடிக்கடி சுனாமியா மாறிவிடுகிறாள்! _____________ ஒருவர்: காசிக்குப் போனால் எதையாவது விட்டுட்டு வரனும்னு சொல்வாங்களே... நீங்க எதை விட்டீங்க? அப்பாவி சுப்பையா: என்னோட மாமியாரை...! _____________ ஒருவர்: உங்க மனைவி காணாமல் போய் மூணு மாசம் ஆகிறதே...இதுவரை என்ன செய்தீங்க...? அப்பாவி சுப்பையா: எந்தக் குறையும் இல்லாமல் என் கொழுந்தியா பார்த்துக்கிட்டா...! _____________ ஒருவர்: கூட்டணியில உங்க கட்சிக்கு அறுபது இடம் கொடுத்தும் வருத்தப்படுறீங்களே...? அப்பாவி சுப்பையா: எங்க கட்சியிலே இருக்கிறதே முப்பது பேர்தான்! _____________ ஒருவர்: உங்க மனைவி பச்சக் குழந்தை மாதிரின்னு எப்படி சொல்றீங்க...? அப்பாவி சுப்பையா: இடுப்பில தூக்கி வச்சு சோறு ஊட்டச் சொல்றாளே! _____________ ஒருவர்: நடுராத்திரியில எழுந்து சுடுகாட்டுக்குப் போனீங்களாமே...எதுக்கு? அப்பாவி சுப்பையா: டாக்டர் என்னை ஆவி பிடிக்கச் சொன்னார். அதான்!
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.