|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
2 |
|
a |
|
சிறுவர் பகுதி-5 கதை.
மூன்று வகை மனிதர்கள்...
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது "
இவ்வுலகில் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
தங்களைச் சூழ்ந்து உள்ளவர்களின் இனிமையைக் கெடுத்து அவர்களுக்குத் துன்பம்
தருபவர்கள் முதல் வகையினர். இவர்கள் கொடியவர்கள்.
அடுத்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அடுத்தவர்களைச் சுரண்டி
வாழ்பவர்கள். இவர்கள் தீயவர்கள்.
மூன்றாவது வகையினர் தாங்கள் இருக்கும் சூழலில் எல்லோரையும் மகிழ்ச்சியாக
இருக்க வைப்பவர்கள். மேலும் மேலும் இனிமையைச் சேர்ப்பவர்கள். இவர்கள்
நல்லவர்கள்." என்றார்.
ஒரு மாணவன் எழுந்து, " நீங்கள் சொல்வது எங்களுக்குப் புரியவில்லை" என்றான்.
உடனே அந்த ஆசிரியர் தன் பையில் இருந்து மூன்று பொம்மைகளை எடுத்தார். ஒன்று
களிமண் பொம்மை, அடுத்தது பஞ்சுப் பொம்மை, மூன்றாவது சர்க்கரைப் பொம்மை.
மூன்று பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றினார்.
முதல் பாத்திரத்தில் களிமண் பொம்மையைப் போட்டார். தண்ணீரில் கரைந்த அது
தண்ணீரையும் பாழாக்கி விட்டது.
இரண்டாவது பாத்திரத்தில் பஞ்சுப் பொம்மையைப் போட்டார். அந்தப் பொம்மை
பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எல்லாம் உறிஞ்சிக் கொண்டது.
மூன்றாவது பாத்திரத்தில் சர்க்கரைப் பொம்மையைப் போட்டார். அந்தப் பொம்மை
பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் கரைந்து தண்ணீரை இனிமை ஆக்கியது.
"இந்த மூன்று பொம்மைகள் மாதிரிதான் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள்"என்றார்
ஆசிரியர்.
மாணவர்களுக்கு இப்போது புரிந்தது மூன்று வகை மனிதர்களைப் பற்றி...
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.