m

           

ms
ms

முத்துக்கமலத்துடன் இணைந்து செயல்பட விருப்பமா?

முத்துக்கமலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் படைப்பாளர்களுக்கு அவர்களது தமிழ் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனும், புதிய தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும் பல  போட்டிகளை அறிவிக்க உள்ளது. இப்போட்டிகளுக்கான பரிசுகளை முத்துக்கமலத்துடன் இணைந்து வழங்க விருப்பமுடைய தமிழர் சங்கங்கள் / தமிழ் இலக்கிய அமைப்புகள் / நிறுவனங்கள் / தனி நபர்கள் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

  • தமிழர் சங்கங்கள் / தமிழ் இலக்கிய அமைப்புகள் / நிறுவனங்கள் வழங்கும் பரிசுகளுக்கு இணையான அளவில் அந்த அமைப்பு / நிறுவனத்தின் விளம்பரங்கள் ஒரு வருடத்திற்கு முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும்.

  • மறைந்துவிட்ட போதும் குடும்பத்தினரின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பெயர்களில் நினைவுப் போட்டிகளாக தனி நபர்களும் போட்டிகளை அறிவிக்கலாம்.

  • அரசியல், சினிமா மற்றும் ஜோதிடம் தவிர்த்த  அனைத்து படைப்புத் துறைகளிலும் போட்டிகளை அறிவிக்கலாம்.

  • முத்துக்கமலத்தில் அறிவிக்கப்படும் போட்டிகளுக்கான பரிசுகளாக அந்த தமிழ் இலக்கிய அமைப்புகள் வெளியிட்ட புத்தகங்கள அல்லது அந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அல்லது அவர்கள் அளிக்க விரும்பும் தரமான பரிசுகள் என்று எதுவாகவும் இருக்கலாம்.

  • முத்துக்கமலத்தில் அறிவிக்கப்படும் போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கும் சங்கங்கள் / அமைப்புகள் / நிறுவனங்கள் பரிசு பெறுபவர்களுக்கு அவர்கள் செலவிலேயே நேரடியாகப் பரிசுகளை அளிக்க வேண்டும்.

  • உலக நாடுகளுக்கான எல்லை இணையத்தில் இல்லை என்றாலும் பரிசுகளை வழங்க அடுத்த நாட்டின் எல்லைகள் தங்களுக்கு அதிகச் செலவைத் தரும் என்று போட்டி அறிவிக்கும் சங்கங்கள் / அமைப்புகள் / நிறுவனங்கள் கருதும் நிலையில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், அரேபிய நாடுகள் என்று குறிப்பிட்ட எல்லைகளுக்கான போட்டிகளாகவும் அறிவிக்கலாம். இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் பங்கேற்க அறிவிக்கும் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

  • போட்டிக்கான  பரிசு வழங்கும் சங்கங்கள் / அமைப்புகள் / நிறுவனங்கள் ஒப்புதலுக்குப் பின்பு முத்துக்கமலம் ஆசிரியர் குழுவின் முடிவிற்குப் பிறகு அதற்கான அறிவிப்புகள் முத்துக்கமலத்தில் வெளியிடப்படும்.

  • ஒரு சங்கம் / அமைப்பு / நிறுவனம் எத்தனை போட்டிகளை வேண்டுமானாலும் அறிவிக்கலாம்.

  • போட்டிக்கான நடுவர்கள் குழுவை முத்துக்கமலம் ஆசிரியர் குழுவே நியமிக்கும்.

  • போட்டியில் நடுவர் குழு அளிக்கும் தீர்ப்பு மட்டுமே இறுதியானது.

போட்டிகள் அறிவிக்க விரும்பும் சங்கங்கள் / அமைப்புகள் / நிறுவனங்கள் / தனி நபர்கள் தங்களது போட்டி அறிவிப்புகளுடன் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

msmuthukamalam@yahoo.co.in

தொடர்பு கொள்ள வேண்டிய அஞ்சல் முகவரி:

எம்.சுப்பிரமணி,

(ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)

19/1, சுகதேவ் தெரு,

பழனிசெட்டிபட்டி,

தேனி- 625 531.

தமிழ்நாடு, இந்தியா.

கைத்தொலைபேசி: +91-9940785925.

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.