........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

சுவையான தீர்ப்பு-3

மோசடி அதிகாரிக்கு புதிய தண்டனை

டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் கணக்காளராக பணியாற்றியவர் ஜீவன்ராம் குப்தா. கடந்த 1980-ம் ஆண்டுகளில் டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் வங்கிக் கணக்குகளில் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சி.பி.ஐ., ஜீவன்ராம் குப்தா பல லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்ததை அடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி சஞ்சீவ் ஜெயின் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் விபரம்:

இந்த வழக்கில் ஜீவன்ராம் குப்தா செய்த மோசடியை சி.பி.ஐ ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது. 65 வயதாகும் குப்தாவிற்கு இந்த வழக்கில் சாதாரணமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும். ஆனால் 65 வயதான குப்தாவிற்கு இப்போது சிறைத்தண்டனை விதிப்பதால் என்ன பயன்? 25 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணைக் காலத்திலேயே அவர் தான் செய்த தவறை உணர்ந்திருப்பார். இனி இதுபோன்ற தவறை நிச்சயம் செய்ய மாட்டார். அதற்காக அவர் செய்த தவறை மன்னிக்க முடியாது. எந்த மனிதனும் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்கப்படுகிறது. குப்தாவின் வயது, அவருக்கு இப்போதுள்ள பொருளாதார நிலை, உடல் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு ரூபாய்50, 000 அபராதம் விதிப்பதுடன், ஒருநாள் முழுவதும் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்

-வி.பி.மணிகண்டன்.

  முந்தைய சுவையான தீர்ப்புகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.