|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
சுவையான தீர்ப்பு-4 மருத்துவக் குறைபாடுகளுக்கு அபராதம்
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்கிற ஊரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி லட்சுமி. கடந்த 2004 ஆம் ஆண்டில் லட்சுமியை பிரசவத்திற்காக தேனி மாவட்டத்திலுள்ள கடமலைக்குண்டு எனும் ஊரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் இல்லாததால் நர்ஸ் சுசிலா என்பவர் பிரசவம் பார்த்தார். லட்சுமிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் தேனியிலிருக்கும் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கும்படி நர்ஸ் சுசிலா கூறினார். இதைத் தொடர்ந்து லட்சுமியை தேனியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அந்த மருத்துவமனையிலிருந்த டாக்டர் அழகம்மாள் லட்சுமியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் மதுரைக்குக் கொண்டு செல்லும்படியும் கூறினார். மேலும் இறந்து பிறந்த குழந்தையின் இறுதிச் சடங்கை தாங்களே பார்த்துக் கொள்வதாகவும் அதற்காக ரூபாய்.250/- தரும்படியும் கேட்டு வாங்கினார். மதுரைக்குக் கொண்டு செல்லும் வழியில் லட்சுமி இறந்தார். இதையடுத்து செல்வம், டாக்டர் அழகம்மாளை சந்தித்து இறந்த குழந்தையின் உடலைத் தருமாறு கேட்டார். ஆனால் குழந்தையின் இறுதிச்சடங்கு அனைத்தும் முடிந்து விட்டதாக டாக்டர் அழகம்மாள் தெரிவித்தார். ஆனால் இதற்கான எந்த ஆவணத்தையும் அவர் தரவில்லை. இது குறித்து செல்வம் தேனி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் கடந்த 19-07-2005ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சங்கரநாராயணன் பிள்ளை, உறுப்பினர் கோபிஜெயந்தி ஆகியோர் நர்ஸ் சுசீலா செய்த குறைபாட்டிற்கு அவர் ரூபாய் 4 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். டாக்டர் அழகம்மாள் இறந்த குழந்தையை ஒப்படைக்காமல் இருந்தது மற்றும் மருத்துவ ஆவணங்கள் சரிவர பராமரிக்காமல் இருந்தது ஆகியவைகளுக்காக ரூபாய் 2 லட்சம் நஷ்ட ஈட்டை 12 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும். மேலும் வழக்குச் செலவிற்காகத் தனியாக ரூபாய் 6 ஆயிரம் தரவேண்டும். நஷ்ட ஈட்டுத்தொகையை செல்வம் மறுமணம் செய்து கொண்டதால் அவருக்கு 30 சதவிகிதமும் லட்சுமியின் தந்தை அண்ணத்துரைக்கு 70 சதவிகிதமும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். |
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.