........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துகள  உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துக உங்கள் கருத்துகள்

உண்மை வெளி வரும்

பேராசிரியர் சிட்னி சுதந்திரன் எழுதிய தமிழ் கிறித்துவக் கீர்த்தனைகளில் பல கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டு விட்டது (மறைக்கப்பட்டுள்ளது) என்று வருத்தப்பட்டிருந்தார். அவருடைய வருத்தம் உண்மைதான். இந்த நிலை கிறித்துவத்தில் மட்டுமில்லை பிற இடங்களிலும் இருக்கிறது. உண்மை என்றாவது வெளி வரும். தங்களைப் போன்றவர்களின் வருத்தமும் மாறும்.

-எம்.செந்தில்குமார், சென்னை.

எனக்கு ஒரு சந்தேகம்

முத்துக்கமலத்தின் கவிதைப் பக்கத்தில் ராமப்ரசாத் பாதியைப் பிடித்துக் கொண்டு விட்டாரே. அவர் ஆசிரியரைத் தனிப்பட்ட முறையில் கவனித்து விட்டாரோ? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு... இதெல்லாம் சரியில்லீங்க...

-ஸ்டாலின் சீனிவாசன், தூத்துக்குடி.

முத்துக்கமலத்தின் வளர்ச்சி வியக்கிறேன்.

முத்துக்கமலம் முதலில் சாதாரணமாக வந்து கொண்டிருந்தது. இப்போது அப்படியில்லை. நிறைய செய்திகள். அத்தனையும் அருமை. முத்துக்கமலத்தின் அபார வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது. முத்துக்கமலத்தின் ஆசிரியர் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்தான். வாழ்த்துக்கள். ஆசிரியர் குழுவிற்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.

-எட்டயபுரம் சீதாலட்சுமி, அமெரிக்கா.

பல வண்ண இதழாக மணம் வீசுகிறது.

தங்களின் ”முத்துக்கமலம்” இலக்கிய இணைய இதழ் கண்டேன். மகிழ்வு மிகக் கொண்டேன். காரணம் பல வண்ண இதழாக, பல்துறை இதழாக மணம் வீசியது வாழ்த்துக்கள்! விரைவில் எனது படைப்புகள் தங்களை நாடி வரும்.

-கவி.செங்குட்டுவன், ஊத்தங்கரை.

பின்னே செல்ல வேண்டியிருக்கிறது.

முத்துக்கமலம் இணைய இதழ் என்னை மிகவும் கவர்ந்தது. முத்துக்கமலத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்து முகப்புப் பக்கம் செல்ல நான் "Back" செல்கிறேன். இதற்கு ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் முகப்புப் பக்கம் செல்ல வழி செய்யலாமே?

-எம்.யேசுதாஸ், மும்பை-78.

(முத்துக்கமலம் இணைய இதழின் ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் வலதுபுறம் “முகப்பு” என்கிற சொல் உள்ளது. அந்தச் சொல்லில் வைத்துச் சொடுக்கினால் முகப்புப் பக்கத்திற்குச் சென்று விடலாம். ஒவ்வொரு பக்கத்துடனும் தொடர்புடைய பிற படைப்புகளுக்கும், படைப்பாளர்களுக்கும் என அனைத்து எளிய வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளது. கவனிக்கவும் -ஆசிரியர்)

a

முத்துக்கமலம் வளர வாழ்த்துக்கள்.

முத்துக்கமலம் இணைய இதழ் பல கிறிஸ்துமஸ் சிறப்புத் தகவல்களுடன் கிறிஸ்துமஸ் சிறப்பிதழாக புதுப்பிக்கப்பட்டிருந்தது. முத்துக்கமலம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான இதழ் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. முத்துக்கமலம் இணைய இதழ்களில் முதன்மை பெற்றிட வாழ்த்துகிறோம்.

-து.தேவபிச்சை & குடும்பத்தினர், தூத்துக்குடி-2.

ஹென்றி பவர் வியக்க வைத்த தகவல்.

ஹென்றி பவர் குறித்த தகவல் முற்றிலும் புதியதாய் இருக்கிறது. கிறித்துவ மதத்திற்கு மட்டுமில்லாமல் தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய பங்கு உண்மையில் வியக்க வைக்கிறது. அவருடைய புகைப்படத்துடன் முழு வரலாற்றையும் கொடுத்த கட்டுரையாசிரியர் பேராசிரியர் சிட்னி.சுதந்திரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-முனைவர்.துரை.மணிகண்டன், திருச்சி.

முத்துக்கமலம் வளர வாழ்த்துக்கள்.

முத்துக்கமலம் இணைய இதழ் தமிழ் வாசகர்களுக்கு சிறப்பான இதழ். இந்த இதழில் தமிழ் வாசகர்களுக்குத் தேவையான பல தகவல்கள் இருக்கின்றன. வளர வாழ்த்துக்கள்.

-ஜே.கே.கே, கிருஷ்ணகிரி.

முத்துக்கமலம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியர்க்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் தேனி மாவட்ட நூலகம் வழங்கிய 2009 ஆம் ஆண்டிற்கான “கலை இலக்கிய சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது அறிந்து மகிழ்கிறோம். விருது பெற்ற அவருக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.

-முனைவர்.துரை.மணிகண்டன், திருச்சி,
-தூத்துக்குடி பாலு, கோவில்பட்டி,
-எஸ்.கார்த்திகேயன், அபுதாபி,
-எஸ்.இளங்கோவன், மதுரை,
-காரைக்குடி.எம்.ரமேஷ், சென்னை-17.

ஆயிரம் அர்த்தங்கள்.

அப்பாவி சுப்பையா பதில்கள் அனைத்தும் அருமையான நகைச்சுவைகள். அப்பாவியாக சுப்பையா பதிலளித்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

-ஆர்.அசோக்குமார்,
சிமோகா. (கர்நாடகா)

ஐந்தில் ஒன்று- நன்றி.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் குறித்த தகவல் அறிந்தோம். முக்தி கொடுக்கும் தலங்கள் ஐந்தில் ஒன்றாக இருக்கும் இந்தத் தலம் குறித்து முழுத் தகவல் அளித்த முத்துக்கமலத்திற்கு நன்றி.

-எம்.செந்தில்குமார்,
சென்னை.

a

பெண்களுக்குப் பயனளிக்கும்

முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடப்பட்டு வரும் புதிய  தொடரான தையல் கற்றுக் கொள்ளுங்கள்- தொடர் பெண்களுக்குப் பயனுள்ள தொடர். இத்தொடரில் புது வடிவ ஆடை தயாரிப்பிற்கான செய்முறைகள் வெளிவரும் என்று நம்புகிறோம்.  ுதிய வடிவ ஆடைகளின் வண்ணப் படங்களை அதிகம் வெளியிடுங்கள்.

-எஸ்.சாந்தி,
கோயம்புத்தூர்.

புதுப்பிக்கப்படவில்லையே...?

முத்துக்கமலம் மாதமிருமுறை ஆங்கிலத் தேதியில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் சரியாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த முறை என்ன ஆச்சு? நவம்பர் 15 கடந்து ஏழு நாட்களாகிறது. இன்னும் புதுப்பிக்கப்படவில்லையே... என்ன காரணமோ?

-காரைக்குடி.எம்.ரமேஷ்,
சென்னை-17.

(நான் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகச் சிக்கன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால், முத்துக்கமலம் இணைய இதழ் கடந்த நவம்பர்-15ல் புதுப்பிக்க முடியாமற் போனது குறித்து வருந்துகிறேன். முத்துக்கமலம் புதுப்பிக்கப்படாதது குறித்து தொலைபேசி, மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட முத்துக்கமலம் இணைய இதழ் வாசக நண்பர்களுக்கும், குணமடைய தகுந்த மருத்துவ உதவிகளைத் தெரிவித்த நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள் பல. இனி இதுபோன்ற தவிர்க்க முடியாத நிலை தவிர்க்கப்படும். தொடர்ந்து புதுப்பிக்கப்படும். -ஆசிரியர்)

கட்டுப்படியாகாதுங்கோ...!

ஆப்பிள் விற்கிற விலையில், தினம் ஒரு ஆப்பிள் எப்படி சாப்பிடுவது? விலை குறையட்டும் அப்புறம் ஆப்பிளைச் சாப்பிடுகிறோம். இப்போதெல்லாம் தினமென்ன, மாதமொருமுறை கூட ஆப்பிள் சாப்பிடனுமின்னாக் கூட நமக்குக் கட்டுப்படியாகாதுங்கோ...

-ஸ்டாலின் சீனிவாசன்,
தூத்துக்குடி-2.

தவறான எண்ணம் மாற்றம்!

முனைவர்.சே.கல்பனா எழுதிய சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா? கட்டுரை படித்தேன். தமிழ்ப் புலவர்கள் என்றாலே ஏழ்மையில் இரந்து பிழைப்பவர்கள் என்கிற என் தவறான எண்ணம் மாற்றமடைந்தது. 

-எம்.செந்தில்குமார் M.A., M.L.I.S., M.Phil.,
சென்னை.

தையற்கலை தொடர் பயனுள்ளது...!

புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஆர்.எஸ்.பாலகுமார் எழுதும் "தையல் கற்றுக் கொள்ளுங்கள்" தொடர் உண்மையிலேயே பயனுள்ள தொடராக அமையுமென்று நம்புகிறேன். ஒவ்வொரு புதுப்பித்தலிலும் ஒவ்வொரு உடைகளைத் தைப்பதற்கான செய்முறைகளை படத்துடன் அளித்து உதவினால் நன்றாக இருக்கும்.  

-கவிதா பால்பாண்டி D.C.D.M., T.T.C.,
ஹார்விபட்டி, மதுரை -625 005.

முந்தைய கருத்துக்கள் அறிய

 

 

முகப்ப

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.