........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துகள  உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துக உங்கள் கருத்துகள்

நடுநிலையில் முத்துக்கமலம்.

முத்துக்கமலத்தில் வெளியான தூத்துக்குடி தூய பனிமயமாதா அன்னைப் பேராலயம் கட்டுரை படித்தேன். அருமையான தகவல்களைக் கொண்ட கட்டுரை. ஆன்மீகம் பகுதியில் வழிபாட்டுத் தலங்களில் இந்து மதக் கோயில்கள் மட்டும்தான் இடம் பெறும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கிறித்துவமத வழிபாட்டுத் தலங்களும் இடம் பெற்றிருப்பது முத்துக்கமலம் நடுநிலையோடு செயல்படுகிறது என்பதை வலியுறுத்துவதாகவே உள்ளது.

-தாமஸ் பெர்னாண்டோ,
ராஜாக்கமங்கலம் துறை.

தனி உலகத் தவிப்புகள்

சுபஸ்ரீஸ்ரீராம் எழுதிய அப்பத்தாவின் அடுப்படி வார்த்தைகள் கதை படித்தேன். வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்று விடும் பலர் அந்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப் போய் பெற்றவர்களையும் மற்றவர்களையும் மறந்து தனி உலகத்தில் தவிப்புகளுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அழகாக எடுத்துக் காட்டுகிறது.

-காரைக்குடி.எம்.ரமேஷ், சென்னை-34.

வலை(ப்பூக்கள்) முத்துக்கள்

முத்துக்கமலம் தமிழில் வெளிவரும் வலைப்பூக்கள் குறித்த சிறு குறிப்புகளுடன் அதன் இணைய முகவரியையும் தந்து வருவது புதிய தமிழ் இணைய தளங்களைப் பார்க்க வசதியாக உள்ளது முத்துக்கமலம் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் தேர்வு செய்யும் பத்து வலைப்பூக்களும் முத்துக்களாகத்தான் இருக்கிறது.

-முனைவர் துரை. மணிகண்டன், திருச்சி.

a

படைப்புகளைத் தாமதமாக வெளியிடுகிறது.

வாசகர் ஒருவர் என் படைப்புக்கள் வெவ்வேறு இதழ்களுக்கும் அனுப்பப்படுகின்றன, இது தனக்குள் ஒரு வெறுப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தார். அதற்கு என் தரப்பிலிருந்து சில விளக்கங்களைப் பதிவு செய்யவே இந்த கருத்துப்பதிவு. முதலில், என் படைப்புக்களுக்கு நான் வெவ்வேறு பெயர்கள் வைப்பதில்லை. பதிவேற்றம் செய்யும் இணைய இதழ்கள் பெயர் மாற்றியோ, அல்லது கவிதை மற்றும் கதைக்குள் சில வரிகள் தாமாகவே திணித்தோ பதிவேற்றம் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இரண்டாவது, படைப்புக்கள் பதிவேற்றத்திற்கு தேர்வானது குறித்து முத்துக்கமலம் இணைய இதழ் எந்தத் தகவலும் படைப்பின் ஆசிரியருக்கு காலத்தில் தெரிவிப்பதில்லை. இதனாலேயே பல்வேறு குழப்பங்கள். என் படைப்புக்களில் சிலவற்றை, நான் முத்துக்கமலத்திற்கு அனுப்பி, முத்துக்கமலம் அவற்றை தேர்வு செய்யவில்லை போலும் என்று எண்ணி, வேறு இதழ்களுக்கு அனுப்பிய பின், தாமதமாக 30 ‍ 45 நாட்களுக்கு பிறகு முத்துக்கமலம் அதன் இதழில் வெளியிடுகிறது.

ப‌டைப்பாளிக்கு ப‌டைப்புக்க‌ளின் தேர்வு குறித்துத் த‌க‌வ‌ல் தெரிவிக்க‌ப்ப‌டுமாயின் வாச‌க‌ர்க‌ளின் இம்மாதிரியான‌ குமுற‌ல்க‌ளை சுல‌ப‌மாக‌ த‌விர்க்க‌லாம் என்ப‌து என் க‌ருத்து. மேலும் இம்மாதிரியான‌ குமுற‌ல்க‌ளுக்கு ப‌தில் அளிக்கையில், உண்மை நில‌வ‌ர‌ம் என்ன என்பதே தெரியாமல் பதில் அளிக்காமல், உண்மை நிலவரம் என்ன என்ப‌தை ப‌டைப்பாளியுட‌ன் ஆலோசித்து, பின் ப‌தில் எழுத‌லாமே.

-ராம்ப்ர‌சாத்.

(எந்தப் படைப்பாக இருப்பினும் அதன் ஆசிரியர்கள் தலைப்பு மாற்றம் செய்வதும், படைப்புளைக் கூட்டியோ அல்லது குறைத்தோ அந்த இதழுக்கு ஏற்றபடி மாற்றம் செய்வது வழக்கம்தான். தமிழ் இணைய இதழ்கள் பொதுவாக எவ்வித இலாப நோக்கமுமில்லாமல் தனிப்பட்ட ஒரு நபராலோ அல்லது ஒரு குழுவாலோ தமிழ்ப் பற்றுதலுடன் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற இணைய இதழ்களிடமிருந்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் படைப்புகள் குறித்துத் தனித்தனியாகப் பதிலளிக்க முடிவதில்லை. எனவே முத்துக்கமலத்தின் படைப்புகள் அனுப்புவதற்கான பக்கத்தில் தெளிவாக சில விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் படைப்புகள் பிற இதழ்களிலும் வெளியாகியிருப்பது குறித்து வாசகரின் கடிதம் கிடைத்த பிறகு, தாங்கள் படைப்புகள் அனுப்பிய மின்னஞ்சல் முகவரியில் பார்வையிட்ட போது ஒரே படைப்பு பல இணைய இதழ்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதும் அந்த முகவரிகள் தெரியாதபடி மறைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது. ஒரே படைப்பு பல இதழ்களில் வெளியிடப்படுவது தங்களுடைய  குறைபாடுதான். அதிகமான படைப்புகளை அனைத்து இதழ்களுக்கும் அனுப்புவதை விட தங்கள் படைப்புகளைப் பல இதழ்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைத்துப் படைப்புகளையும் எந்த இதழாலும் வெளியிட இயலாது. முத்துக்கமலம் இணைய இதழுக்கு வந்த படைப்புகளில் கவிதை மட்டும் மூன்று ஆயிரத்துக்கும் மேல் இருப்பிலுள்ளது. மேலும் பிற இதழ்களில் வெளியான படைப்புகளை எந்த இதழும் வெளியிட விரும்புவதில்லை. தம்முடைய தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதை விட தவறைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பது சிறந்தது. வாசகர் குறை தெரிவிக்கும் போது, ஒரே படைப்பு ஒரே நேரத்தில் சில இதழ்களில் வெளியிடப்படும் நிலையை நேரடியாகவே பார்த்துவிட முடிகிறது.  இணையத்தில் எப்போது வேண்டுமாயினும் பார்க்கும் வசதியும் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் படைப்பாளிகளுடன் கலந்தாலோசித்துப் பதில் எழுத வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.  -ஆசிரியர்)

படிப்பினை வழங்கும் குட்டிக்கதைகள்.

முத்துக்கமலத்தில் வெளியாகும் குட்டிக்கதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. குட்டிக்கதைகளை அதிக அளவில் வெளியிடுங்கள். படிப்பதற்குச் சுவையாகவும், படிப்பினை வழங்குவதாகவும் அவை அமைந்திருக்கின்றன.

-பா.சத்யா,
பெங்களூர்.

உதவாத பட்டப்படிப்பு.

கல்லூரி வாசல் பகுதியில் வெளியிடப்பட்ட வாழ்க்கைக்குப் பட்டப்படிப்பு மட்டும் உதவாது கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அருமை. வணிக மயமாகி விட்ட கல்வி நிறுவனங்களுக்கு மத்தியில் கல்வியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்கிற நிலையில் இந்தக் கட்டுரை மிக அருமை.

-எம்.செந்தில்குமார்,
சென்னை.

a

தளத்திற்கு வருகை அதிகரிக்கும்.

முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான தேவாங்கர் சமுதாய வரலாறு படித்தேன். மகிழ்ந்தேன். அதிகமான வாசகர்கள் தங்கள் சமுதாயம் குறித்த தகவல் அறிய தங்கள் தளத்திற்கு வருகை தர பிற சமுதாயக் கட்டுரைகளையும் வெளியிடலாம். 

-சித்ரா சிவக்குமார்,
டுங் சங், ஹாங்காங்.

என் கவிதைகளை அனுப்பலாமா?

முத்துகமலம் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் மிக பயன் தரத்தக்கதாக இருக்கிறது. முத்துக்கமலத்தில் இடம் பெற என் கவிதையை ஏற்றுக் கொள்வீர்களா? எதை மையமாகக் கொண்ட கவிதைகளை அனுப்பி வைப்பது? 

-ஏ. கார்த்திகைநாதன்,
டிக்ளிபூர், அந்தமான் வடக்கு.

(சிறப்பான கவிதைகள் அனைத்தும் முத்துக்கமலத்தில் வெளியிடப்படும். தாராளமாக அனுப்பி வைக்கலாம். கவிதை தவிர பிற தலைப்பிலான படைப்புகளையும் அனுப்பலாம். -ஆசிரியர்)

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

முத்துக்கமலம் இணைய தளத்தில் பல தலைப்புகளில் பல சுவையான செய்திகள் உள்ளன. வெளிநாட்டிலுள்ள எங்களைப் போன்றவர்கள் படித்து மகிழ சிறந்த தளம் முத்துக்கமலம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 

-சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முத்துக்கமலம் ஒவ்வொரு முறை புதுப்பிக்கப்படும் பொழுதும் புதுப்புதுத் தகவல்களுடன் மகிழ்விக்கிறது. முத்துக்கமலம் வளர்ச்சியில் உதவும் படைப்பாளர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

-எட்டயபுரம் சீதாலட்சுமி,
அமெரிக்கா.

படைப்புகளைப் புறக்கணிக்குமா?

ராம்ப்ரசாத் எழுதும் கதை, கவிதைகள் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான சமயத்தில் வேறு சில இணைய இதழ்களிலும் வெளியாகிறது. தலைப்பு மட்டுமே மாறியிருக்கிறது. ஒரே படைப்பை வேறு வேறு இதழ்களில் படிக்கும் போது வெறுப்பு ஏற்படுகிறது. மேலும் அவருடைய படைப்புகளைப் படிக்கும் ஆர்வமே போய் விடுகிறது. முத்துக்கமலம் படைப்புகள் அனுப்பும் பகுதியில் குறிப்பிட்டிருப்பது போல் அவருடைய படைப்புகளை முத்துக்கமலம் இணைய இதழ் புறக்கணிக்குமா?. 

-காரைக்குடி எம். ரமேஷ், சென்னை-17.

(தங்கள் படைப்புகள் ஏதாவது ஒரு இதழில் வெளியானால் போதுமென்கிற நிலையில் படைப்பாளர்கள் சிலர் செய்யும் தவறுகள் இவை. இருப்பினும் தங்கள் படைப்புகளை ஒரு இதழுக்கு அனுப்பி விட்டு அதே படைப்பை வேறு சில இணைய இதழுக்கும் அனுப்புவது சிறந்ததல்ல என்பதைப் படைப்பாளர்கள் உணர வேண்டும். முத்துக்கமலம் இணைய இதழில் ராம்ப்ரசாத்க்கு அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படியிருந்தும் அவர் ஒரே படைப்பை முத்துக்கமலம் இணைய இதழிலும், பிற இதழ்களிலும் வெளிவரச் செய்தது வருத்தமளிக்கிறது. ராம்ப்ரசாத் பிற இணைய இதழ்களில் எழுதுவதை முத்துக்கமலம் எவ்விதத்திலும் தடை செய்யவில்லை. ஆனால் அவர், முத்துக்கமலத்திற்கு அனுப்பிய படைப்புகளைப் பிற இணைய இதழ்களுக்கு அனுப்பாமல் இருந்திருக்கலாம். அல்லது, வேறு இதழ்களுக்கு அனுப்பிய படைப்புகளை முத்துக்கமலத்திற்கு அனுப்பாமல் இருந்திருக்கலாம். இந்நிலையில் ராம்ப்ரசாத் படைப்புகள் முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறாது என உறுதியளிக்கிறோம் - ஆசிரியர்)

மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

நெல்லை விவேகநந்தா எழுதியிருந்த காளஹஸ்தீஸ்வரர் கோயில் கட்டுரை உண்மையாகவே சிறப்பானது. இதுபோன்ற கோயில் செய்திகளை அதிகம் வெளியிடுங்கள். அந்தக் கோயிலுக்குச் சென்று வந்தது போல் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

ப. மீனாட்சி சுந்தரம், திருப்பத்தூர்.

முத்துக்கமலம் நல்ல இணையதளம்

முத்துக்கமலம் ஒரு நல்ல இணைய தளம். இதில் தேடுபவர்களுக்கு நல்ல தீனி கிடைக்கும். இப்பொழுதுதான் பார்த்தேன். அனைத்து தவகல்களும் ஒரே இணைய தளத்தின் கீழ் அழகாகத் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் குழுவின் தொண்டு தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

-ஆர். ஈஸ்வரன் வெள்ளகோவில்.

மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவியுங்கள்!

சிரிப்புடன் சிந்திக்கவும் வைத்த சிறப்பான சம்பவங்களாக, பெர்னாட்ஷாவின் நகைச்சுவைகளைத் தொகுத்தளித்த தேனி. எஸ். மாரியப்பனுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவியுங்கள். அவருக்கு என் நன்றியைத் தெரிவியுங்கள். 

-பிரேமா ஜெயச்சந்திரன், குளித்தலை.

முந்தைய கருத்துக்கள் அறிய

 

 

முகப்ப

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.