|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||||||
|
|
||||||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||||||
| a | ||||||
|
|
||||||
| a | ||||||
|
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துகள்
முற்பட்ட வகுப்பினர் பட்டியல்! தமிழ்நாடு சாதிகளில் பட்டியலில் இல்லாத சாதிகள் அனைத்தும் முற்பட்ட வகுப்பினர் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழ்நாட்டிலுள்ள முற்பட்ட வகுப்பினர் பட்டியலை முத்துக்கமலத்தில் வெளியிட்டிருந்தது மேலும் பல சாதியினரை அறிந்து கொள்ள முடிந்தது. -திருப்பதி வாசன், விருதுநகர். ஆண்களுக்கு சவுக்கடி! லதா சரவணனின் “தங்கச்சியைப் பிடிச்சிருக்கு!” கதை உண்மையில் நல்ல கருத்துள்ள கதை. அக்காவைப் பெண் பார்க்கப் போய் தங்கச்சியைப் பிடிச்சிருக்கு என்று சொல்லும் ஆண்களுக்கு கொடுத்த சவுக்கடி. -அஞ்சனா சுரேஷ், சென்னை. பள்ளி விழாக்களுக்கு ஏற்ற நாடகம்! மகாபாரதத்தின் ஒரு பகுதியான ஏகலைவன் கதையை நாடக வடிவில் “மனதில் உறுதி வேண்டும்” எனும் தலைப்பில் சித்ரா சிவக்குமார் அழகாக எழுதியிருந்தார். பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் அரங்கேற்ற சிறந்த நாடகம். இது போன்ற நாடகங்களையும் முத்துக்கமலத்தில் அவ்வப்போது வெளியிடுங்கள். -ஆர். ராமலட்சுமி, சென்னை. பின்னூட்டம் குறித்துப் பரிசீலிக்கலாமே.! முத்துக்கமலத்தில் உங்கள் கருத்துக்கள் பகுதியில் ஒரு சில கருத்துக்கள் மட்டுமே இடம் பெறுகிறது. கவிதை போன்ற படைப்புகளுக்கு பின்னூட்டம் ஏதும் வருகிறதா? படைப்பாளர்களுக்கு இந்தப் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கும் என்பதால் முத்துக்கமலத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்துக்கும் அந்தப்பக்கத்தில் பின்னூட்டம் இடும் வசதி செய்யப்பட்டால் நன்றாக இருக்கும். முத்துக்கமலம் இதழ் குழுவினர் இது குறித்து பரிசீலிக்கலாமே...?
-பாளை. சுசி, குட்டிக்கதைகளின் எண்ணிக்கை அதிகமாகிறதே...! முத்துக்கமலத்தில் இப்போதெல்லாம் குட்டிக்கதைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மனித உடல் குறித்த குறுந்தகவல் நம் உடலைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. பாரதி தேவராஜ் எழுதிய பணப்பெட்டியுடன் ஓட்டம் கதையின் முடிவு பணம் தேடுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் படிக்க வேண்டிய முடிவு.
-எம். செந்தில்குமார், பழந்தமிழர் விழாக்கள் அருமை! அந்தக்காலத்தில் கோயில் திருவிழா மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு பழங்காலத் தமிழர் விழாக்கள் எத்தனையோ இருந்திருக்கிறது என்கிற தகவல் உண்மையிலேயே ஆச்சர்யம்தான். முனைவர். சி. சேதுராமன் எழுதிய கட்டுரையில் விழாக்கள் குறித்து பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
-ஆர். அசோக்குமார், ஒன்றுமில்லாமல் போய்விட்டதே! ஷக்தி பிரசன்னா எழுதிய பூமியைக் காப்போம் கட்டுரை உண்மையில் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. காடுகளையும், மரங்களையும் அழித்து பூமியை வெப்பமாக்கி வருங்கால சந்ததியினருக்கு வாழ வழியில்லாமல் செய்து வருகிறார்கள் என்று வருத்தப்படும் நம்மால் அவர்களைத் திருத்த முடியாது. முடிந்தவரை நாம் நம் வீட்டில் சில மரங்களையாவது வளர்ப்போம்!
-ஆர். ரவிபிரசாத், ஒன்றுமில்லாமல் போய்விட்டதே! கடல் தொடர்கதை படிக்க விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்தது. கடைசியில் ஒன்றுமில்லாமல் முடிந்து போய்விட்டது. கதையின் முடிவு சாதாரணமாகப் போய்விட்டதே! கடல் தண்ணீர் அதிகமாகத் தெரிந்தாலும் கடைசியில் அது உப்புத் தண்ணீர்தான் என்பது போல் கதைக்குள் இருந்த பல விசயங்கள் ஒன்றுமில்லாமல் போய்விட்டதே...
-எம். செந்தில்குமார், நன்றியோடு ஒரு கவிதை!
முத்துக் கமல இதழுக்கே - மன -சா இராமாநுசம்.
a |
|
சும்மா சொல்லக் கூடாது! தற்செயலாக முத்துக்கமலம் இணைய இதழ் காணும் வாய்ப்பு கிடைத்தது. கீதை காட்டும் பாதை எனும் தலைப்பிலான கட்டுரை ஆன்மிகக் கட்டுரை என்று சொல்வதை விட நல்வாழ்விற்கு வழிகாட்டும் நல்வழிக் கட்டுரை என்று சொல்லலாம். சும்மா சொல்லக்கூடாது; சும்மா என்பது சும்மா இல்லை. அதிகப்படியான அர்த்தமுள்ளதாயிருந்தது. முத்துக்கமலத்தில் இடம் பெறும் கட்டுரைகள் எல்லாம் பாதுகாக்க வேண்டிய கட்டுரைகள்.
-ஆர். செல்வமாரி, ஆசிரியர்களுக்கு உதவும். முனைவர் மா. தியாகராஜனின் குறுந்தொகைக் கதைகள் படிக்கச் சுவையாக இருக்கிறது. கற்றல் கற்பித்தல் தொடர் தமிழ் வழியில் ஆசிரியப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவக் கூடியதாக இருக்கிறது. முத்துக்கமலத்தில் வெளியாகும் கதைகள் சமூக சிந்தனையுடனான கதைகளாக இருப்பினும் கதையில் சற்று அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். கருத்தாழமிக்க கதைகளாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
-வானதி மணிகண்டன், சிரிப்புகளுக்குப் பஞ்சமா? முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகும் பல்வேறு படைப்புகளில் நான் விரும்பிப் படிப்பது குட்டிக்கதைகள் மற்றும் நகைச்சுவைப் பகுதிகள்தான். குட்டிக்கதைகள் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இடம் பெறுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிரிக்க சிரிக்க பகுதியில் எதையும் காணோமே...? முத்துக்கமலத்தில் சிரிப்புகளுக்குப் பஞ்சமா? சிரிப்புகளை அதிகம் வெளியிடுங்கள்... ப்ளீஸ்..
-எஸ். ஸ்டாலின் சீனிவாசன், அடையாளம் காட்டிய அருமை! ஊர்ச்சொத்தையெல்லாம் கொள்ளையடித்து தங்கள் சொத்தைப் பெருக்கிக் கொள்ளும் இந்தக் கால அரசியல்வாதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, எங்கோ பிறந்த பென்னி குக் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொண்டு வர தன் சொத்தை விற்றுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை குறித்த செய்திகளைக் கொண்ட அடையாளம் பகுதிக் கட்டுரை உண்மையில் அருமை. அவரை மறக்காமல் தங்கள் குடும்பக் குழந்தைகளுக்குப் பெயர் வைத்துக் கொண்டிருப்பது நம் தமிழனுக்குப் பெருமை.
-காரைக்குடி. எம். ரமேஷ், பழந்தகவல்களை உணர்த்தும் கட்டுரை. மதுரை காஞ்சியின் அமைப்பு கட்டுரை மூலம் மதுரை மாநகரம் அன்றைய காலத்திலேயே அழகாக ஒழுங்கமைக்கப்பட்ட நகரமாகத் திகழ்ந்துள்ளது எனபது தெளிவாகிறது. இந்தக் கட்டுரையில் நகரக் கட்டமைப்பு மட்டுமில்லாது, வாழ்க்கை நடைமுறைகளையும் கூட அறிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற பழந்தகவல்களை உணர்த்தும் கட்டுரைகளை முத்துக்கமலம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
-முனைவர். துரை. மணிகண்டன், பெருமை தருபவை. திருமந்திரத்தில் யோகம் குறித்த கட்டுரை யோகா குறித்த பல்வேறு தகவல்களை சிறப்பாக விளக்கியது. இன்று உலகம் முழுவது வெகு வேகமாகப் பரவி வரும் உடல் நலத்திற்கு யோகா அவசியம் என்கிற உண்மைக்கு ஆதாரமாக விளங்குவது இந்திய யோக முறைகள்தான் என்பது நமக்கெல்லாம் பெருமை தருபவை.
-எம்.செந்தில்குமார்,
a |
| முத்துக்கமலம் தமிழுலகில் ஒரு சிறந்த சஞ்சிகை. முத்துக்கமலம் ஒரு சிறந்த கல்வி கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகை. அது மாதமிருமுறை வெளிவருவதால் வாசகர்களிடையே பரிச்சயம் ஏற்பட ஏதுவாகின்றது. முத்துக்கமலத்தின் அற்புத ஆக்கங்களை வாசித்து, கிரகித்து இரசித்து, இன்புற தமிழ் வாசகர்கள் மிகவும் ஆசையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கினறனர். ஆன்மீகம் என்ற பகுதியில் வெளிவரும் சமய ரீதியிலான கட்டுரைகள், அறிவுரைகள் இளைஞருக்கும் வளர்ந்தோருக்கும் மிகப்பயன் மிக்கவை. இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய முக்கிய நான்கு சமயங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் மிகவும் தெளிவாக முன் வைக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர் ஏனைய சமயங்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் ஐயங்களையும் அகற்றிக் கொள்ளும் வகையில் சமயங்களின் போதனைகள் எளிய மொழி நடையில் விளக்கப்பட்டுள்ளன. மேலும்,இச்சஞ்சிகையில் இடம் பெறும் கவிதைகள் நல்ல தரமானவை. சிறந்த கருப்பொருள்களைப் பொதிந்தவை. அத்துடன் இக்கவிதைகள் பொருத்தமான பட விளக்கங்களுடன் வெளிவருவதனால் வாசகர்களின் உணர்வுகளுக்கு விருந்தாகின்றன. சிறுவர்கட்கான கவிதைகளும் கருத்துள்ள பட விளக்கங்களுடன் வெளிவருகின்றன. அவை சிறுவர்களுக்கு இனிய பாடல்களாக அமைந்து விடுகின்றன. மேலும், மருத்துவம் என்ற பகுதியில் நல்ல கைமருந்துகள் பற்றிய விபரங்கள் இச்சஞ்சிகையில் வெளிவருகின்றன. பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியவை. இச்சஞ்சிகையில் இடம் பெறும் பொன் மொழிகள் சமயம், கல்வி, தத்துவம், ஒழுக்கவியல் சம்பந்தமானவை.தூய உள்ளங்களை உருவாக்குவதற்கு உதவக்கூடியவை. எல்லாவற்றுக்கும் மேலாக, படைப்பாளர்களை வாசகரகளுக்கு விஷேடமாக அறிமுகம் செய்யும் பணி மகத்தானது.. -கலாபுஷணம் எம்.வை.எம். மீஆத், தும்புளுவாவை, இலங்கை. பார்வைக்கு அழகாக... தங்கள் முத்துக்கமலம் இணைய இதழ் பார்வைக்கு மிகவும் அழகாக உள்ளது. வலைதள கட்டமைப்பும் அருமை. அதுபோல, தங்களது எண்ணங்களும், எழுத்துக்களும் என்றும் நம் மனித சமூகத்திற்கு முழுப்பயனளிக்கவும், தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை மிளிரச் செய்யவும் தூண்டுகோலாக அமைந்திட எனதன்பான நல்வாழ்த்துக்கள்!
-எஸ்.கே. ஸாலிஹ், சரியான கருத்து! தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழித் தமிழ்க் கருத்தரங்கில் முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியர் தேனி எம். சுப்பிரமணி கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு இணையதளங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலுள்ளன. அதை தமிழ் மொழிக்கு மாற்ற முன் வரவேண்டும் என்று வலியுறுத்தியது உண்மையில் சரியே. சரியான நேரத்தில் சரியான கருத்தை வலியுறுத்தியது குறித்து வாழ்த்துக்கள். -முனைவர் துரை. மணிகண்டன், பெரம்பலூர்.
|
|
|