........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                             
   இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துகள  உங்கள் கருத்துகள்  உங்கள் கருத்துக

வடிவமைப்பும் தரமும் உயர்ந்திருக்கிறது.

முத்துக்கமலம் புதுப்புது மாற்றங்களுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வருவது நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நல்ல கருத்துக்களுடன் இருப்பதால் தமிழ் வாசகர்களிடையே தரம் உயர்ந்தும் நிற்கிறது.

-சுகதேவ்,
முன்னாள் பொறுப்பாசிரியர்- தினமணிக்கதிர்,
சென்னை.

 படைப்புகள் குறித்த கருத்தும் சிறப்பு

தங்களுக்கு வந்த இதழ்களின் முகவரிகளை மட்டும் வெளியிடாமல்  அந்த இதழ்களில் வெளியான படைப்புகள் குறித்த தங்களது சில கருத்துக்களையும் சேர்த்து "கிடைக்கப் பெற்றோம்" பகுதியில் வெளியிட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது.

-காரைக்குடி. எம்.ரமேஷ், சென்னை-17.

குழந்தையின் தாய் தண்டிக்கப்பட வேண்டும்.

மகளிர் மட்டும் பகுதியில் வெளியான சில சுவையான குழந்தைத் தகவல்களில் கடுமையான போதையில் பிறந்த பெண் குழந்தை குறித்த தகவல் வருத்தமடைய வைத்தது. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்த அந்தக் குழந்தையின் தாய் தண்டிக்கப்பட வேண்டியவரே.

-எம்.சரண்யா, பெங்களூர்.

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? தலைப்பில் வெளியான பொன்மொழிகள் படித்தேன். நல்ல தொகுப்பு அது.

-சு. விஸ்வநாதன், சென்னை-4.

பழமையான பெயரை...

அந்தக் காலத்தில என்ன பெயர்? என்ற குறுந்தகவலில் எங்கள் ஊரின் பழமையான பெயரைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

-கே.செந்தில் ஆறுமுகம், திருநெல்வேலி.

m

சுவையான தகவல்கள்

சுவையான தீர்ப்புகள் புதிய பகுதியில் சொல்லப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் உண்மையிலேயே சுவையான தகவல்கள்தான். சுவையான தகவல்கள் இனியும் தொடர்ந்து வரட்டும். 

-மல்லிகா பிரபாகரன், கோயம்புத்தூர்.

வாழ்க்கைக்கான  பொன்மொழிகள்

பொன்மொழிகள் பகுதியில் வெளியான "வாழ்க்கையைக் கோட்டை விடலாமா?"-வில் இருந்த ஐந்து பொன்மொழிகளுமே அருமையாக இருந்தது.   

-எம். ரமேஷ் M.C.A., சென்னை-17.

பெண்ணின் எண்ணங்களையும் மதிக்கலாமே?

மகளிர்மட்டும் பகுதியில் வெளியான "வரன் எப்படி அமைய வேண்டும்?" என்கிற பழம்பெரும் செய்யுள் சொல்லும் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது.  பெற்றோர்கள பெண்ணின் எண்ணங்களையும் மதித்து வரன்களைத் தேர்வு செய்ய வேண்டும். 

-வி. சுபலட்சுமி, பெங்களூர்-21.

இருப்பதை விட்டுவிட்டு...

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படும் பலரும் படிக்க வேண்டிய பாடம் வி.ல.நாராயண சுவாமி எழுதிய "தஞ்சாவூர் பாசஞ்சர்" கதை.

-எஸ். முத்துக்குமார், இராஜபாளையம்.

இரண்டுமில்லாமல் இரண்டு ஆண்டுகள்

அரசியல், சினிமா என்று இதை மட்டுமே நம்பியிருக்கும் இணைய இதழ்களுக்கு மத்தியில், இந்த இரண்டுமே இல்லாமல் முத்துக்கமலம் இரண்டு ஆண்டுகளைக் கடந்து விட்டதா?  ஆச்சர்யம்தான்.  பயனுள்ள பல தகவல்களுடன் தமிழ் இலக்கிய ஆர்வத்துடன் மூன்றாம் ஆண்டில் பயணிக்கும் முத்துக்கமலம வெற்றி இலக்கை அடைந்திட வாழ்த்துக்கள்.

-என். மூவேந்தன், சென்னை-14.

முந்தைய கருத்துக்கள் அறிய

 

 

முகப்ப

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.