........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உதவிக்களம்-1

சந்தேகங்களும்-பதில்களும்

காணாமல் போன பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற என்ன செய்ய வேண்டும்? 

பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் கல்விச் சான்றிதழ் போன்றவைகளை தாங்கள் எந்த இடத்தில் தவற விட்டதாகக் கருதுகிறீர்களோ, அந்த ஊர்க் காவல் நிலையத்தில் காணாமல் போய் விட்ட தங்களது அனைத்துச் சான்றிதழ்கள் குறித்தும் முதலில் புகார் அளிக்கப்பட வேண்டும். மேலும் இது குறித்து பத்திரிகைகளில் "காணவில்லை" எனும் தலைப்பில் விளம்பரமும் செய்ய வேண்டும். அதன் பின்பு காவல் நிலைய அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி சான்றிதழ்களைத் தேடுவதற்கு சிறிது கால அவகாசம் எடுத்துக் கொள்வார்கள். அதன் பின்பும் சான்றிதழ்கள் கிடைக்காத நிலையில் தங்கள் சான்றிதழ்கள் காணாமல் போய்விட்டது குறித்து ஒரு சான்றிதழ் அளிப்பார்கள். அந்தச் சான்றிதழ் மூலம் தாங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரியில் மாற்றுச் சான்றிதழையும், அந்தப் பள்ளி / கல்லூரி மூலமாகவே கல்விச் சான்றிதழ்களையும் இரண்டாம் படியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

நலிவடைந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

இயல், இசை, நாடகம் போன்ற துறைகளில் பங்கு பெற்று வறுமையில் வாடும் நலிவுற்ற கலைஞர்களுக்கு தமிழக அரசு நிதியுதவியாக மாதந்தோறும் ரூ500/- மட்டும் வழங்குகிறது. இந்த உதவித்தொகையைப் பெற நலிவடைந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு சில தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி,

1. கலைஞர்கள் 58 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

2. ஆண்டு வருமானம் ரூ 4800/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. கலைஞர்கள் குறிப்பிடத்தக்க கலைச் சேவை புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

4. இயல், இசை, நாடகமன்றச் செயலாளர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரைப்படி அரசால் வகுக்கப்பட்டுள்ள விதி முறைகளுக்கு உட்பட்டு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு ஒன்றால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை அளிக்கப்படும்.

-இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விபரங்களுக்கு அவர்களுடைய மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகலாம்.

 

முந்தைய உதவிக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.