........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உதவிக்களம்-2

சந்தேகங்களும்-பதில்களும்

கிராமக் கோயில்களில் பூசாரிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

கிராமக்கோயில்களில் பூசாரியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து ஓய்வடைந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மூலம் ஓய்வூதியத்தொகையாக மாதம் ரூ.500/- வழங்கப்படுகிறது.  இந்த ஓய்வூதியத் தொகையைப் பெற கிராமப் பூசாரிகள் கீழ்காணும் சில தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவிக்கிறது. இதன்படி,

1. கிராமக் கோயில் பூசாரியாகப் பணிபுரிந்த கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது.

2. கிராமக் கோயில் பூசாரியாக குறைந்தது 20 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.

3. ஓய்வு பெறும் பூசாரியின் வயது 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

-மேற்காணும் தகுதியுடையவர்கள் அந்தப் பகுதியிலுள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் அவர்களை அணுகி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

பதில் அளித்து உதவியவர்:

க.ஆறுமுகம்,
திருநெல்வேலி-6.

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி,

1. அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

2. இதேபோல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் இரு கல்லூரி முதல்வர்களின் ஒப்புதலுடன் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்காணும் இட மாற்றத்திற்கான அனுமதி ஒரே பல்கலைக் கழகத்தின் கீழ் இணைத்துக் கொண்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும்  பொருந்தும். பிற பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் படித்து வரும் கல்லூரியில் நடந்த பல்கலைக்கழகத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மே மற்றும் நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் அல்லது இந்த இயக்கத்திற்கான இணைய தளத்தில் மாற்றம் செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவத்தில் தற்போது பயின்று வரும் பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் மாற்றம் செய்து கொள்ள விரும்பும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஒப்புதலைப் பெற்று சென்னையிலுள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் இருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பொழுது இட மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் தரம் உயர்த்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அதாவது, பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவற்றில் பயின்று வரும் மாணவர்கள் இடம் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்புகள் இல்லை.

பதில் அளித்து உதவியவர்: 

டாக்டர்.எம்.ராகவன் M.E., Ph.D.,
முதல்வர்,
லதா மாதவன் பொறியியல் கல்லூரி,
அழகர்கோவில், மதுரை. 

முந்தைய உதவிக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.