|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
உதவிக்களம்-6 சந்தேகங்களும்-பதில்களும்
கல்கத்தாவிலுள்ள The Institution of Engineers (India) என்கிற அமைப்பு இந்த தேர்வுகளை நடத்துகிறது. இந்த தேர்வுகள் மாணவர் நிலை (Studentship), பகுதி-அ (Section-A), பகுதி-ஆ (Section-B) என்று மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. +2 முடித்த மாணவர்கள் (கணக்கை ஒரு பாடமாக எடுத்திருக்க வேண்டும்) முதலில் மாணவர்கள் நிலையில் சேர வேண்டும். அந்த நிலையில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பகுதி-அ நிலையில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். இந்நிலையில் வெற்றி பெற்றவர்கள் இறுதியாக பகுதி-ஆ நிலையில் அவர்கள் விருப்பப் பாடமாக எடுத்த பிரிவில் (கட்டிடவியல், மின்னியல், இயந்திரவியல் போன்ற பொறியியல் பிரிவுகள்) தேர்வு எழுத வேண்டும். இந்த மூன்று நிலையிலும் வெற்றி பெற்றவர்களுக்கு A.M.I.E., சான்றிதழ் அளிக்கப் படுகிறது. இந்த சான்றிதழ் பெற்றவர்கள் B. E., பட்டப் படிப்புக்கு நிகரானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு (I.A.S) , இந்தியக் காவல் பணித் தேர்வு (I.P.S) போன்ற தேர்வுகள் எழுதவும் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். மேலும் அரசுப் பணிகளில் B.E., பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த A.M.I.E., சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி மையங்கள் முன்பு நிறைய இருந்தன. தற்போது B. E., பட்டப் படிப்புக்கான சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் துவங்கப்பட்டு விட்டதால் இந்த படிப்பில் சேர்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போய் விட்டது. இருப்பினும் பொறியியல் துறை சார்ந்த பணியில் இருப்பவர்கள் பலர் கல்வியிலும், பணியிலும் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக இந்தப் பயிற்சியில் சேர்ந்து வருகிறார்கள்.
-தாமரைச்செல்வி.
நல்ல வேலை கிடைக்கும் என்று எந்த படிப்பிற்கும் எந்த பல்கலைக் கழகத்திற்கும் தனியான ஒரு நிலையை நாமாக உருவாக்கிக் கொள்ளக் கூடாது. நாம் படிப்பதே நம்முடைய திறனை வளர்த்துக் கொள்வதற்காகத்தான். நம்முடைய திறனை வைத்துத்தான் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு பொறியியல் கல்லூரிகள் அந்தந்தப் பகுதியிலிருந்த பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப் பட்டிருந்தன. தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்விக்கான கல்லூரிகளை மட்டும் ஒரே பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டு வரும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் 2000வது ஆண்டில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன. தமிழகத்திலிருந்த அதிகமான பொறியியல் கல்லூரிகளை நிர்வகிப்பதால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு 2006-ம் ஆண்டில் இந்தப் பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் கூடுதலாக இரண்டு தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களைத் துவங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. தமிழக சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகத்தினரும், மாணவர்களும் புதிதாகத் துவங்கும் பல்கலைக் கழகங்கள் அண்ணா பல்கலைக் கழகம் என்கிற பெயரிலேயே செயல்பட வேண்டுமென்று விரும்பியதால் முதலில் அண்ணா பல்கலைக் கழகம், சென்னை, அண்ணா பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி என்று மூன்றாகப் பிரிக்கப் பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் பகுதியிலும் ஒரு அண்ணா பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அண்ணா பல்கலைக் கழகம், திருநெல்வேலி என்று நான்காவதாக ஒரு பல்கலைக் கழகம் அமைக்கப் பட்டது. நான்கு அண்ணா பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் படிப்பில் எந்த மாற்றமுமில்லை. இது தவிர தமிழ்நாட்டில் மிகப் பெரிய பொறியியல் கல்லூரிகளாக இருந்த சில கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. இங்கும் படிக்கலாம், பட்டம் பெறலாம். எங்கு படித்தாலும், பட்டம் பெற்றாலும் அவரவர் முயற்சிக்கும் திறனுக்கும் தகுந்தவாறே வேலையைப் பெற முடியும் என்பதால் மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துவது நல்லது. -தாமரைச்செல்வி
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.