........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

உதவிக்களம்-7

சந்தேகங்களும்-பதில்களும்

எந்தெந்தக் குறைபாடுகளுக்கு நாம் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட முடியும் என்று தெரிவியுங்களேன்?   ( ஆர். கிருஷ்ணசாமி, நெய்வேலி.)

நாம் பணம் செலுத்தி வாங்கும் பொருள்களில் உள்ள குறைபாடுகள் அல்லது பணம் செலுத்திப் பெறும் சேவைகளில் உள்ள குறைபாடுகள் போன்றவைகளுக்கும் இதனால் ஏற்படும் மனஉளைச்சல் காரணங்களுக்கும் தகுந்த நிவாரணம் கோரி நுகர்வோர் நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியும். 10 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட முறையீடுகள் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும் அதற்கு மேற்பட்ட முறையீடுகள் மாநிலக் குறைதீர் மன்றங்களிலும் மேல்முறையீடுகள் தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றங்களிலும் தாக்கல் செய்து தகுந்த தீர்வைப் பெறமுடியும். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களையோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளையோ அணுகலாம்.

-தாமரைச்செல்வி.

 சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தால் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற முடியுமா?   ( சி. கலைச்செல்வி, செய்யாறு.)

தமிழகத்தில் சென்னையிலும், பாளையங்கோட்டையிலும் என்று இரண்டு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.  சில சுயநிதி சித்த மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன. இங்கு படித்துப் பட்டம் பெறும் மருத்துவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால் அரசு மருத்துவமனை / இந்திய மருத்துவ ஆய்வு மையங்களில் சித்த மருத்துவராகப் பணியாற்ற முடியும். மத்திய அரசு நடத்தும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற  உயர்பதவித் தேர்வுகளிலும் கலந்து கொள்ள முடியும். ஆனால் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கான அரசுப் பணியிடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால் இவர்களில் பலரும் தனியாக சித்த மருத்துவமனைகள் நடத்தி வருகின்றனர்.

-தாமரைச்செல்வி

முந்தைய உதவிக்களம் காண

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.