........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                 
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

விவாதக்களம்-1

இன்றைய சமுதாய சூழலுக்கு முதியோர் இல்லங்கள்

தேவையுள்ளது !  தேவையில்லை !

as

தேவையுள்ளது !

கட்டாயமாகி விட்டது

நம்மை வளர்த்த பெற்றோர்கள் மேல் அதிகமான அக்கறை இருந்தாலும் இன்று தொழிலுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அவர்களைத் தனியே விட்டுச் செல்ல வேண்டிய சூழல் கட்டாயமாகி விட்டது. இந்நிலையில் முதியோர் காப்பகங்களின் தேவை அவசியமாகி வருகிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும்

- ஸ்டாலின் சீனிவாசன், தூத்துக்குடி.

முதியோர் இல்லங்கள் முக்கியமே...

இந்த நாகரீக உலகில் இளம் வயதினர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல், இந்தக் காலத்திற்கு ஒத்து வராத அறிவுரைகளை அள்ளி வழங்கி , பழைய பாட்டையேப் பாடிக் கொண்டு,  குடும்பத்தில் குழப்பமேற்படுத்தி வரும் முதியவர்கள் தனிமைப் படுத்தப்படுவது சரியானதுதான். பிள்ளைகளுக்குப் பணம் செலவானாலும் பரவாயில்லை... அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் முதியோர் இல்லங்கள் முக்கியமே...

- இசக்கிமுத்து , சென்னை-17.

தட்டிப் பறிக்கும் இளசுகள்

முதுமைக் காலத்தில் ஆண்களாயிருந்தால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வரவும், பெண்களாயிருந்தால் வீட்டிலுள்ள குழந்தைகளைப் பராமரிக்கவும் சம்பளமில்லாத வேலைக்காரர்களாகத்தான் பலரும் பயன்படுத்தப் படுகின்றனர். ஓய்வெடுக்க வேண்டிய அவர்களது முதுமைக்காலத்தை இந்தக்கால இளசுகள் தட்டிப் பறித்து விடுகின்றனர். அவர்களிடமிருந்து விடுபட முதியோர் இல்லங்கள் தேவைதான்.

-கே.சேகர், பெங்களூர்.

முடமான கோழிகளுக்கான காப்பகம்

முதியோர்களின் இறுதிக்கால நிலைமை வெளிநாடுகளில் மெச்சப்படுவதாக இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்திய நாட்டில் குடும்பப் பொருளாதார நிலையிலுள்ள குறைபாடுகளே அக்குடும்பத்திலுள்ள முதியோரையும் பாதிக்கிறது. வயதாகி விட்டால் தம்மை எல்லோரும் ஒதுக்குகிறார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை நம் நாட்டு முதியோரிடம் இருப்பதும் ஒரு காரணம். அண்மையில் ஒரு முதியோர் இல்லத்தில் நான் கண்ட வாசகம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. "குஞ்சுகள் மிதித்து முடமான கோழிகளுக்கான காப்பகம்"  என்ற வாசகம்தான் அது.

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.

 

தேவையில்லை !

சட்டங்கள் வேண்டும்.

 பெரும் எதிர்பார்ப்புகளுடன் வளர்த்த பெற்றோர்களுக்கு, அவர்களின் கடைசிக் காலக் கட்டத்தில் துணையாய் நாம் இருக்க வேண்டும். அனாதைகளாக இருப்பவர்களுக்கு இல்லங்கள் இருக்கலாமே தவிர,  அனாதையாக்கப் படுவதற்கு இந்த முதியோர் இல்லங்கள் துணை போய் விடும். வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் தகுந்த பாதுகாப்பளிக்கத் தேவையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

- கவிதா பால்பாண்டி, மதுரை.

குழந்தைகளைப் போல் பாதுகாக்க...

முதியோர் பாதுகாப்பை வலியுறுத்தும் பாடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டு வர வேண்டும். நம் வளர்ச்சிக்கு உதவிய பெற்றோர்களை வயதான காலத்தில் ஒதுக்கி விடாமல் அவர்களை நம்முடன் வைத்து நம் குழந்தைகளைப் போல் பாதுகாக்க வேண்டும். முதியோர் இல்லங்களை விட நம் வீட்டிலேயே அவர்கள் விரும்பும் வசதிகளுடன் அவர்களுக்குத் தகுந்த தனி அறைகளை அளிக்கலாம்.

-நடுக்கரையான், காரியாபட்டி.

ஒதுக்கித் தள்ளுபவர்கள் ஒரு சிலரே.

தங்களது வாழ்க்கைப் பயணத்தில் பெற்ற அனுபவங்களை பிள்ளைகளுக்குச் சொல்லி நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டும் பெரியவர்களை ஒதுக்கித் தள்ளுபவர்கள் ஒரு சிலர்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெற்றோர்களிடம் அறிவுரை பெற்றுத்தான் பலரும் செயல்படுகின்றனர். இங்கு முதியோர் இல்லங்களும் தேவையில்லை... இது போன்ற விவாதங்களும் தேவையில்லை...

- வே.கலைவாணன் B.E., (Agri) , ஏற்காடு

ka

இது முடிவல்ல...  ...  ...  மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ...

msmuthukamalam@yahoo.co.in

- ஆசிரியர் குழுவினர்.

kam

முந்தைய விவாதக்களம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.