|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
|
|
|
a |
|
|
விவாதக்களம்-10 வெளிநாட்டு வேலையில் இருப்பவர்களின் உறவுகள் மதிக்கிறது...! பாதிக்கிறது...! ( தலைப்பு தந்த வாசகர்: ஆர்.எஸ்.செல்வமுருகன், இராமனாதபுரம்.)
|
|
|
as |
|
மதிக்கிறது...! அதன் மதிப்பே தனிதான். வெளிநாட்டில் வேலையிலிருந்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். இதனால் அந்தக் குடும்பத்தின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடுகிறது. வாழ்க்கைத் தரத்தில் உயரமாயிருக்கும் அவர்களுக்கு நாம் நம்மை அறியாமலேயே மதிப்பு கொடுக்கிறோம். இன்று ஒருவரது மதிப்பு அவர்களிடம் உள்ள பணத்தாலேதான் மதிப்பிடப்படுகிறது. மேலும் நம் நாட்டிலேயிருந்து வெளிநாடு சென்று சம்பாதிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கூடுதலான திறமை இருப்பதாகத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. உறவுகளும் அவர்களுக்கு தனி மரியாதை அளிப்பதில் அக்கறை கொள்கின்றன. வெளிநாட்டு வேலையிலிருந்தால் அதன் மதிப்பே தனிதான்.
-இ.கருப்பசாமி, மதுரை.
|
பாதிக்கிறது...! உறவுகளின் பிரிவுகள் மனவேதனை
வெளிநாட்டு வேலைக்குச் சென்று விட்ட
குடும்பத் தலைவனை மனைவி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
மேலும் உள்ளூரில் சாதாரணமான கூலி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் குடும்பங்களில்
உள்ள மனநிறைவு வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களின்
குடும்பங்களில் இருப்பதில்லை. பணத்தின் தேவைக்காக உறவுகளின் பிரிவுகள்
உருவாவதுடன் மன வேதனைகளும் உருவாகினறன. மொத்தத்தில் வெளிநாட்டு வேலை உறவுகளைப்
பாதிக்கத்தான் செய்கிறது.
- சுப.மாணிக்கம், புதுக்கோட்டை.
உறவுகளுக்கு மட்டுமில்லை. வெளிநாட்டு வேலை எனும் ஆசையில் இங்கு வந்து விட்டாலும் எங்களைச் சுற்றி வருவது எங்கள் குடும்பமும் , உறவுகளும்தான். நாங்கள் இங்கே தனியே இருப்பது எங்களுக்கு துயரத்தையே தருகிறது. சில சமயங்களில் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை. கடுமையான வேலை என்று நாங்கள் நிறையவே பாதிக்கப்படுகிறோம். இந்தப் பாதிப்பு உறவுகளுக்கு மட்டுமில்லை எங்கள் உள்ளங்களுக்கும்தான்.
-உ.அருண்குமார், துபாய். |
இது முடிவல்ல... ... ... மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ... - ஆசிரியர் குழுவினர். |
|
|
|
| முகப்பு | |