|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
|
|
|
a |
|
|
விவாதக்களம்-11 கவலைகள் வளர்வதற்கு காரணமாயிருப்பது மனமாற்றமே! தடுமாற்றமே! ( தலைப்பு தந்த வாசகர்: எஸ்.முகம்மது இக்பால், கடையநல்லூர்.)
|
|
|
as |
|
மனமாற்றமே...! கவலையை நினைத்து நினைத்தே... கவலை எப்போது வருகிறது? நமக்குத் துன்பங்கள் வரும்போது நம்மை அறியாமலே கவலைப்படத் துவங்குகிறோம். இன்பத்தில் மகிழ்ச்சியடைந்த மனம், கவலையில் துவண்டு விடுகிறது. இந்தக் கவலையை மறந்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கினால் கவலை காணாமல் போய்விடும். ஆனால், நாம் கவலைக்குள் போய் விட்டால் அதற்குள் மூழ்கிப் போகிறோம். அதிலிருந்து வெளியேற முடியாமல் கவலையை நினைத்து நினைத்தே கஷ்டப்படுகிறோம். இதற்கெல்லாம் நமது மனமாற்றமே காரணம். வந்த கவலையை மறந்து விட்டு வரப்போகும் மகிழ்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும். அதற்கான மனமாற்றத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கவலையும், மகிழ்ச்சியும் அதை நாம் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில்தான் இருக்கிறது.
-பா.கார்த்திகைச்
செல்வி, சென்னை-44. |
தடுமாற்றமே...! விடாத ஆசை விரட்டுகிறது.
நாம் இருக்கும் நிலையிலிருந்து சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைய
முயற்சிக்கும் போது நம்மை அறியாமலேயே ஆசையில் பெரிய எண்ணத்துக்குப் போய்
விடுகிறோம். இந்த தடுமாற்றம் நம்மை கவலையில் கொண்டு போய் விட்டு விடுகிறது.
விடாத ஆசை நம்மை கவலையோடு சேர்த்து விரட்டுகிறது. நாமும் நம் மகிழ்ச்சி
நிலையிலிருந்து தடுமாறி ஓடுகிறோம். இந்த ஓட்டம் நம் கவலையை வளர்த்துக்
கொண்டேயிருக்க, ஆசையில் அகப்பட்டு அல்லல் படுகிறோம். வாழ்க்கை முழுவதும் இது
நம்மைத் துரத்துகிறது. நாமும் கவலைகளோடு ஓட்டத்தை விடாமல் தவிப்புகளோடும்...
எதிர்பார்ப்புகளோடும்... ஓடுகிறோம்... ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதற்கு முடிவு
நம் வாழ்க்கையின் முடிவுதான். -ஆர்.அகிலேச மூர்த்தி, திருச்சி-3.
|
இது முடிவல்ல... ... ... மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ... - ஆசிரியர் குழுவினர். |
|
|
|
| முகப்பு | |