|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
a |
|
|
விவாதக்களம்-12
குழந்தைகள் வளர்ப்பில் பெரிதும் அக்கறை காட்ட வேண்டியது
|
|
|
as |
|
தாயே! தாயின் அரவணைப்பிலே...
குழந்தைகளுடன் அதிக நேரம் இருப்பது தாய்தான். தாயின்
செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் தாயைப் போலவே தங்களைத்
தயார்படுத்திக் கொள்கின்றன. மேலும் குழந்தைகள் தாயின் அரவணைப்பிலேயே இருக்க
விரும்புகின்றன. எனவே குழந்தை வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்ட வேண்டியது
தாய்தான் ..
-வெங்கடேஸ்வரி
ராமானுஜம், சாத்தூர். தாயின் வளர்ப்பில் குழந்தைகளை அறிவுடையவர்களாகவும், வீரமுடையவர்களாகவும், வளர்ப்பதில் தாயின் பங்குதான் அதிகமானது என்பதற்கு நம் வரலாற்றுக் கதைகள் பல சான்றாக இருக்கின்றது. தாயின் பாசத்துடன் அவள் போதிக்கும் தகவல்கள் குழந்தையின் மனதிற்குள் அப்படியே உட்கார்ந்து விடுகிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் தாயின் பயிற்சிகள் எளிமையானதாகவும், அதே சமயம் குழந்தையின் மனதில் ஆழமானதாகவும் அமைந்து விடும். குழந்தை வளர்ப்பு என்றாலே அது தாயாகத்தான் இருக்க முடியும்.
-என். தமிழ்செல்வி, ராமநாதபுரம்.
|
தந்தையே! தந்தைகளே அக்கறை காட்டுங்கள். குழந்தை பிறந்ததிலிருந்து தாயுடன்தான் இருக்கிறது. எனவே தாய் தன் பிள்ளைகளுக்கு அதிகமாய் செல்லம் கொடுக்கிறாள். இந்த செல்லமான வளர்ப்பில் குழந்தைகளின் அறிவுப்பூர்வமான செயல்பாடுகள் அதிகரித்தாலும் எல்லா விஷயத்திலும் தன்னை முன்னிலைப் படுத்த முயல்கிறது. தாய் கண்டிப்புகள் வெறும் கண் துடைப்பாகவே குழந்தைக்குத் தெரிகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் கண்டிப்பாக தந்தையின் கண்டிப்பு அவசியம். தந்தையின் கண்டிப்பின்றி வளரும் குழந்தைகள் தவறான பாதைக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமிருப்பதால் தந்தைகளே குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்டுங்கள்.
-பி. ராஜேந்திரன், சேலம்-3. எங்களிடமே தள்ளி விடலாமா? நாங்கள் குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து பெற்றுத் தருகிறோம். அதற்குப் பின்பும் மூன்று வருடங்கள் வரை கூட எங்கள் உடனேயே வைத்திருக்கிறோம். அதன் பின்பு, பள்ளியில் சேர்த்த பிறகாவது குழந்தை வளர்ப்பில் அக்கறை காட்ட முன் வரவேண்டும். இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்று எங்களிடமே தள்ளி விடக்கூடாது. அந்தக் குழந்தையின் வளர்ப்பில் தந்தைகளும் பங்கு கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் வளர்ப்பில் உள்ள கஷ்டங்கள் தெரியும். எங்களுக்கும் சில கஷ்டங்கள் குறையும்.
-ராஜேஸ்வரி கிருஷ்ணன், நாகப்பட்டினம்.
|
இது முடிவல்ல... ... ... மேலும் இது குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது... ... ... - ஆசிரியர் குழுவினர். |
|
|
|
| முகப்பு | |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.